ராமேஸ்வரம் நவ. 27- இந்திய எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் அத்துமீறியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்திய கடற்பரப்பில் தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தங்களை நோக்கி, அதிவேக ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் விடுத்து விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஜிபிஎஸ் கருவி ஆதாரத்துடன் புகார் கூறி உள்ளனர். தங்களை அதிவேக படகில் வந்து விரட்டி யதில் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்து உள்ளதாகவும் வேதனை தெரிவித்து உள்ளனர். படகு ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்ததாக ஜிபிஎஸ் கருவி ஆதாரத்தை காட்டி விளக்கம் அளித்து உள்ளனர்.
