இருக்கன்குடி மாரியம்மன் கோயில் முறைகேடு! பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை

- Advertisement -

சாத்தூர், நவ. 26– விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், இலவச முடிக் காணிக்கைத் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கோயில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் (24.11.2026) நேரில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், பக்தர்களுக்கான இலவச முடி காணிக்கைத் திட்டத்தில் விதிகளை மீறி 28 பேர் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், அந்தச் சோதனையின்போது சட்ட விரோதமாகப் பணியமர்த்தப் பட்டவர்களிடமிருந்து ரூ.59,520-ம், கோயில் உதவி ஆணையர் (கமிஷனர்) அலுவலகப் பாதுகாப்புப் பணியாளரிடமிருந்து ரூ.20,500-ம் என மொத்தம் ரூ.80,020 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக, கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி, பாதுகாப்புப் பணியாளர் சிங்காரவேலு உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த முறைகேட்டில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா மற்றும் சட்டவிரோதப் பணியமர்த்தல் எவ்வாறு நடந்தது என்பது குறித்துக் கண்டறிய, கோயிலில் பணிபுரியும் பிற ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் நேற்று முதல் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *