சென்னை, நவ.25 பாடநூல் அச்சிடுவோர் நலச் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விரைவில் வெளியிடப்படவுள்ள புத்தக அச்சிடுவதற்கான வரவிருக்கும் ஒப்பந்தப்புள்ளியில் (Tender) கீழ்க்கண்ட நிபந்தனையைச் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் முக்கியமான கோரிக்கையாகும்.
“அச்சகம் மற்றும் பைண்டிங் அலகுப் பிரிவு தமிழ்நாடு மாநிலத்திற் குள்ளேயே அமைக்கப்பட்டு மற்றும் செயல்பட்டு வரும் அச்ச கங்கள் மட்டுமே பங்கேற்கத் தகுதி யுடையவை.”
தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வழங்கப்படும் அச்சிடும் பணிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000-க்கும் மேற்பட்ட குடும்பங் களின் வாழ்வாதாரமாய் அமைந் துள்ளது.
இந்த அச்சிடும் பணிகள் அச்சக உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல், அச்சகத் தொழிலாளர்கள், புத்தகம் பைண்டிங் செய்யும் பணியாளர்கள், இயந்திர இயக்குநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் பணி யாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர் களுக்கும் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் வழங்குகின்றன.
பாடநூல் கழகத்தால் வழங்கப் படும் அச்சிடும் பணிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.90 கோடி ஆகும்.
இந்தப் பணிகளைத் தமிழ்நாட் டிற்குள் செயல்படும் அச்சகங்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் நிபந் தனை விதிக்கப்பட்டால், அது மாநி லத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர அச்சுத் தொழில் நிறுவனங் களுக்கு மிகப்பெரிய ஆதரவாக அமையும்.
இதன் மூலம் உள்ளூர் நிறு வனங்கள் தங்களது தொழிலைத் தொடர்ந்து நடத்தவும், குறு, சிறு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ் நாட்டில் நலிந்து வரும் அச்சுத் தொழில் துறையை பாதுகாக்கவும் முடியும்.
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் மற்றும் விதிகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஒப்பந்தங்களுக்கு அகில இந்திய அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும் என்பதைக் காரணமாகக் கூறி, இந்த நிபந் தனையைச் சேர்ப்பதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆனால், பாடநூல் அச்சிடும் பணி என்பது முக்கியமாகக் கூலி அடிப்படையிலான தொழிலாளர் பணியாகும். ஏனெனில், அச்சிடு வதற்குத் தேவையான காகிதம் மற்றும் அட்டைகள் ஆகியவற்றைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் பணிகள் கழகமே வழங்குகிறது.
எனவே, இது கூலி அடிப்படை யிலான அச்சிடும் பணியாக இருப் பதால், கீழ்க்கண்ட நிபந்தனையை ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் அரசு சேர்க்க முடியும்.
மேலும், நாங்கள் முன்வைக்கும் இந்த நிபந்தனையானது இந்தியாவின் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அச்சகங்கள் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பதைத் தடை செய்வதோ அல்லது தகுதி நீக்கம் செய்வதோ அல்ல.
இந்தியாவின் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அச்சகமாக இருந்தாலும், அதன் அச்சிடும் பிரிவும், பைண்டிங் பிரிவும் தமிழ்நாட்டிற்குள் அமைந்திருந்து செயல்பட்டு வந்தால், அந்த அச்சகம் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கலாம் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.
எங்களின் இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு சாதகமாகப் பரி சீலித்து உரிய ஆதரவு வழங்கும் என நம்புகிறோம் என பாடநூல் அச்சிடுவோர் நலச் சங்கத்தின் தலைவர் வி. பிரேம்குமார், செய லாளர் ஜெயசங்கர் ஆகியோர் செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
