தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ஒதுக்கிய நிதி நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

- Advertisement -

மதுரை, நவ.27- தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மேம்பாட்டு நிதி ரூ.28.54 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மேம்பாட்டு நிதி ரூ.28.54 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டு 12 பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தணிக்கை செய்யவும், அதில் முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு செய்யப்பட்ட நிதியை திரும்ப வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு துறையின் நிதியை இன்னொரு துறைக்கு மாற்றம் செய்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மேம்பாட்டுக்கான நிதியை பிற அரசு துறைகளுக்கு மாற்றம் செய்வதை நிறுத்தவும், இதற்காக உரிய நடைமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “அரசிடம் கேட்டால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  திட்டத்தின் பலனை பெறும் பயனாளிகள் இல்லை என்பார்கள். அனைவரும் நல்ல நிலைக்கு உயர்ந்து விட்டார்களா? பயனாளிகளை கண்டுபிடிக்காமல் நிதியை வேறு துறைக்கு மாற்றுவது எப்படி?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், மனு தொடர்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின நலத்துறை இயக்குநர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு, இதே கோரிக்கை தொடர்பான மற்றொரு மனுவுடன் சேர்த்து  விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.

 

இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அரங்கு!

சென்னை, நவ. 27- இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழ்நாடு அரங்கு தங்கம் வென்றுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது டில்லி பாரத் மண்டபத்தில் நடந்து வரும் 45ஆம் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026இல், ‘வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்’ என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் சார்பில் முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது நேற்று (26.11.2026) வழங்கப்பட்டது.

இந்த விருதை இந்திய பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜாவேத் அஷ்ரப், மற்றும் மேலாண்மை இயக்குநர் நீரஜ் கர்வால், ஆகியோரிட மிருந்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், பெற்றுக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *