திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டத்தில் வரும் 4, 6 ஆம் தேதிக ளில் ஜூலை மாத தாயுமானவர் திட்ட ரேசன் பொருள்கள் விநி யோகிக்கப் பட உள்ளன.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துகே சென்று ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயு மானவர் திட்டம்‘ திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப் படுகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,211 நியாய விலைக் கடை களைச் சேர்ந்த 78,581 குடும்ப அட்டைகளில் உள்ள 1,17,433 பயனாளிகளுக்கு அவர்தம் வீடுகளில் குடிமைப் பொருள் கள் விநியோகிக்கப்படு கின்றன.
பயனாளிகள் இதன்மூலம் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித்தார்.
