பொள்ளாச்சி, நவ. 25- பொள்ளாச் சியில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகளை குறிப்படும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து, தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (24.11.2028) நடந்தது. சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்.
அப்போது விவசாயிகள் பேசிய தாவது: தாவளத்தில், பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சாலையோரங்களில் உள்ள ஆழியாறு புதிய ஆயக்கட்டு கால்வாயில், மழைநீர் கலக்காமல் இருக்க வடிகால் அமைக்க வேண்டும். மேலும், கால்வாயை சேதப்படுத்தும் வகையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும். அரசூர், கம்பாலபட்டி, தொண்டாமுத்துார், குள்ளேகவுண்டனுார் பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளது. சாலைகள் சீரமைக்காததால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர்.
கருப்பம்பாளையம், வக்கம்பாளையம் பகுதிகளில் குழாய் பதிப்புக்காக தோண் டப்பட்ட சாலைகள் உருக்குலைந்து உள்ளதுடன், கால்வாயும் சேதமாகி யுள்ளன. விவசாயிகள் குறைதீர் கூட்டத் துக்கு அரசுத்துறை அதிகாரிகள் மாறி, மாறி வருவதால், விவசாயிகள் தெரி விக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கூட்டத்தில் முறையான விளக்கமும் தெரிவிப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரியை கூட்டத்தில் பங்கேற்ப தற்கென பணி ஒதுக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறையில், நகர்புற, கிராமப்புற விவசாயிகள் என தரம் பிரித்து, சலுகைகளும், மானியமும் வழங்கு கின்றனர். சலுகைகள் வழங்குவதில் பாரபட்சம் கட்டுவது தவிர்க்க வேண்டும். விவசாயம் சார்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப, விவசாயிகளை மட்டுமே தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் கழிவுகள் கொட்டுவது நிறுத்தப் பட்டுள்ள நிலையில், திப்பம்பட்டி பகுதியில் பொது இடத்தில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரிப்பதால் சுகாதாரம் பாதிக்கிறது. ஜல்லிபட்டியில், 26 ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு எது என்று கண்டறியவில்லை. அதற் கான நிவாரண உதவியையும் வழங்க வில்லை. எப்போது நிவாரணம் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவிக்க வேண்டும். மயில் தொல்லை, காட்டுப்பன்றிகள் தொல்லைக்கு தீர்வு காணவில்லை. குஞ்சிப்பாளையம் சுடுகாட்டினை ஆக்கிரமித்து திடக் கழிவுகள் கொட்டப்பட்டடுள்ளன. இவை உடனடியாக அகற்ற வேண்டும். மயானத்தை குப்பை கிடங்காக மாற்றுவதை தடுக்க வேண்டும். அங்கு கட்டப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்தை இடமாற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணல், மண் அனுமதியின்றி கடத் துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதிக அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.
சார் ஆட்சியர் பேசியதாவது: பொள்ளாச்சியில் உள்ள சாலைகளில் அன்றாடம் விபத்துகள் நடக்கின்றன. விபத்துகள் இல்லாத நாளே இல்லை. சாலைபாதுகாப்பு கமிட்டியில் முடிவுகள் எடுப்பது செயல்படுத்தப்படுகிறதா என தெரிவிக்க வேணடும். நெடுஞ்சாலைத் துறையில் நிதியிருந்தும், சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டப்படுகிறது. பொள்ளாச்சி – உடுமலை சாலை தற்போது சீரமைக் கப்பட்டதால் உயரமாக உள்ளது. சர்வீஸ் ரோட்டில் இருந்து உடுமலை சாலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, சர்வீஸ் ரோட்டையும் சீரமைக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். மண் மற்றும் மணல் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கலாம். சட்டவிரோத செயலலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிப் பதுடன், வழக்குப்பதிவு செய்தல் என சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தார்.
