பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பசுமை எரிசக்தி தொழில் முனைவோரை உருவாக்கும் பயிற்சி

1 Min Read

தஞ்சாவூர், ஜூன் 25- வல்லம்,  பெரியார் நூற்றாண்டு  பாலிடெக்னிக் கல்லூரியில்  உள்ள  Periyar Foundation for Pre-incubation சார்பில் “Build & Beyond” என்ற தலைப்பில் நாட்டின் எரிசக்தி எதிர்காலத்திற்கான “பசுமை எரிசக்தி தொழில் முனைவோரை உருவாக்குதல்” பற்றி சிறப்பு பயிற்சி நிகழ்வு 19.06.2026 அன்று நடைபெற்றது.

நம் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 2005- 2008 வரை பயின்ற முன்னாள் மாணவர் ஜி.ராஜகணேசன் இயக்குநர் VATIO  Energy India Private Limited, Chennai.  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசுமை எரிசக்தி துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

நிகழ்வை இரண்டாமாண்டு கணினியில் பிரிவின் மாணவி எஸ்.சஹித்யா தொகுத்து வழங்கினார். மூன்றாமாண்டு கணினியில் பிரிவின் மாணவி எல்.பிரியங்காசிறீ வரவேற்புரையும், பி.பஸ்ரினாசஹ்ரின் நிகழ்வின் அறிமுகம் மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுகமும் செய்தனர்.

நிறைவாக மூன்றாமாண்டு கணினி பிரிவின் மாணவி எம்.தரணி நன்றியுரை ஆற்றினார். Periyar Foundation for Pre-incubation ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் 140 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் மற்றும் மற்ற கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *