டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*உச்சநீதிமன்ற உத்தரவை மீறி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்: சர்ச்சைக்குரிய தீபத்தூணில் ஏற்றப் படவில்லை! திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தும், அங்கு தீபம் ஏற்றப்படாமல் வழக்கமான தீப மண்டபத்தில் ஏற்றப்பட்டது. இதற்கு எதிராக பாஜக, ஹிந்து அமைப்புகள் போராட்டம்; நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மதுரை ஆட்சியருக்கு எதிராக மனு தாக்கல்.
* கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியர் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக புகார்; பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு. விசாரணையை அய்.ஜி. அல்லது டி.அய்.ஜி. தலைமையில் நடத்தவும், அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*பஞ்சாபில் அகாலிதளம்–பாஜக கூட்டணி: காங்கிரசுக்கு ஆரம்பகட்ட தேர்தல் முன்னிலை! சிரோமணி அகாலிதளம்–பாஜக கூட்டணி அறிவிப்பால் பஞ்சாபில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன; 2022 தேர்தலில் ஆம் ஆத்மி 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றியது. இந்தக் கூட்டணியை விமர்சித்த முதலமைச்சர் பகவந்த் மான், இது கொள்கை கூட்டணி அல்ல; அரசியல் ஆதாயத்திற்கான சந்தர்ப்பவாதக் கூட்டணி எனக் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி.காங்கிரஸ் நிலையை வெளிப்படுத்தும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பட்டியல்: உத்தரப் பிரதேச தேர்தல்: தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு இடையே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி செய்தி! மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 4, புந்தேல்கண்டில் ஒரு தொகுதி என 5 வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள் ளது. இதில் காங்கிரஸ் கோரிய பெஹட், சஹாரன் பூர் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
தி ஹிந்து:
* குஜராத் மாடல் ‘பல்லிளிப்பு’: குஜராத்தில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ரத்தசோகை: ‘மாதிரி மாநிலம்’ என்ற கூற்றுக்கு காங்கிரஸ் கேள்வி! அய்.சி.எம்.ஆர். (ICMR) ஆய்வின்படி, குஜராத்தில் 10–19 வயதுடைய இளம் பெண்களில் 61.4%, 20–59 வயதுடைய பெண்களில் 63.8% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் கருநாடகா கூடுதல் மனு தாக்கல்
* வாக்காளர் பட்டியலில் தந்தையின் பெயர் நீக்கம்: குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்! மேற்கு வங்கத்தின் கூச் பெஹாரில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது தந்தையின் பெயர் நீக்கப்பட்டதால், இரண்டரை மாதக் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* கொல்கத்தா மாநகராட்சி தலைமையகத்தில் சாவர்க்கர் படம்: சர்ச்சை; முன்னாள் திரிணாமுல் கவுன்சிலர்கள் போராட்டம் அறிவிப்பு! ஆங்கிலேய அரசிடம் மன்னிப்பு கடிதம் அளித்து சிறையிலிருந்து விடுதலை பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘சங்கி குரங்குகள் ஏமாற்றமடைந்தன’: பாரம்பரிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதற்கு காங்கிரஸ் வரவேற்பு! உயர்நீதிமன்ற உத்தரவின்படி, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி உரிய இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அரசியல் செய்ய வந்த சங்கி சக்திகள் ஏமாற்றமடைந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா
