கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

22.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரஸ் இல்லாத இந்தியா என பேசி வந்த பிரத மர் மோடி, தற்போது காங்கிரசிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் என்று பேசும் நிலை உருவாகியுள்ளது, என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
* மோடியின் மத வெறுப்பு பேச்சுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்; மக்கள் பிரச்சினைகளை தான் பேசுவோம், மல்லிகார்ஜூனா கார்கே பதில்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கேரள பல்கலைக்கழக செனட்டில் ஆளுநரின் பரிந்துரைகளை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மாநில அரசு பரிந்துரைத்ததில் நீதிமன்றம் தலையிட வில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன: டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை.
தி டெலிகிராப்:
* உத்தரபிரதேசத்தில் கிராமத்தில், ஆட்சி மாற்றம் வருமா என்ற ஏக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
தி ஹிந்து:
* கிழக்கு உ.பி.யில், வெற்றிக்காக இந்திய கூட்டணி முழு வீச்சில் களமிறங்குகிறது.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *