நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்வதற்கு திமுக, ஒய்எஸ்ஆர் காங் கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக் கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு நாடாளுமன்றத்தில் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படு வதால், இக்கட்சிகளின் ஆதரவு உறுதி அற்றதாக உள்ளது.
* தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் என அரசுக்கு முன்கூட்டியே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தகவல். முன்கூட்டியே குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் கொள் முதல் செய்திருந்தால், கூடுதல் செலவில் குறைந்தது 50% வரை மின்வாரியம் மிச்சப்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தி இந்து:
* வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, மோடி, அமித்ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோர் நீதியைச் சந்தித்து தண்டனை பெறுவார்கள் என ராகுல் காந்தி எச்சரிக்கை. அரசின் ஆயுட்காலம் முடியப்போகிறது என்றும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் பெரும் பணக்காரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கி ஆதாயப் பரிமாற்ற முறை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கோவா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றம்சாட்டினார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், போலி வாக்குகளை சேர்த்து எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் உண்மையான வாக்குகளை நீக்க பாஜக சதி செய்வதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். எஸ்.எஸ்.ஆர். (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) எதற்குத் தேவை எனக் கேள்வி எழுப்பிய அவர், வாக்குச்சாவடிகளில் சமாஜ்வாதி கட்சியினர் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
* இந்தியக் கல்வி முறையை விமர்சித்த ராகுல் காந்தி, லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்வி வாய்ப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவதாகக் கூறினார். பணம், அதிகாரம் அல்லது ஆங்கில அறிவு இல்லாதவர்களை கல்வி அமைப்பு எவ்வித தயக்கமுமின்றி புறக்கணிப்பதாக அவர் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
