காண முடியுமா?
நாம் வளர வேண்டும்; உலகத்தைப் பார்த்து நம் மக்கள் அறிவு பெற வேண்டும்; வளர்ச்சியடைய வேண்டும். உலக மக்கள் வாழ்வில் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலைக்கு நம் மக்கள் வாழ்வும் உயர வேண்டும். இதைத் தவிர எனக்குக் கடவுள் – மதம் – மொழி – தேசம் என்பதிலெல்லாம் பற்றோ, கவலையோ உண்டென்று சொல்லுமாறு எனது நடத்தையில் ஏதேனும் காண முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
