தி.மு.க. வழக்குரைஞரணி இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சிறப்புரை

- Advertisement -

 ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்தவர்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் தப்பிக்கலாம்!
திராவிட இயக்கங்களிடமிருந்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைவாதிகளிடமிருந்தும் அவர்கள் தப்பிக்க முடியாது!
நாடு முழுவதும் வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள்,
மாணவர்கள் மத்தியில் இக்கருத்தரங்கம் நடைபெற வேண்டும்!

சென்னை, நவ.18  ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்தவர்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் தப்பிக்கலாம், இந்தப் பெரியார் திடலிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. திராவிட இயக்கங்களிடமிருந்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைவாதிகளிடமிருந்தும் அவர்கள் தப்பிக்க முடியாது. அந்தக் காரணத்தினால்தான், நம்முடைய ஆசிரியர் அவர்கள் இந்தக் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். இது நாடு முழுவதும் வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் கருத்தரங்குகளாக நடைபெற வேண்டும் என்றார்  தி.மு.க. வழக்குரைஞரணி இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள்.

Contents

சிறப்புக் கருத்தரங்கம்

கடந்த 12.11.2026 மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம் – தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில், தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா?’’ என்ற தலைப்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில், தி.மு.க. வழக்குரைஞரணி இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

யார் யாரெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள் தெரியுமா?

யாரெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘‘இது மிகவும் தேவையான புத்தகம், இந்தியாவுக்குத் தேவையான புத்தகம், இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய புத்தகம், அரசியல்வாதிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய புத்தகம்’’ என்று பாராட்டியிருக்கிறார்கள் தெரியுமா?

பா.ஜ.க. ஆட்சியில் இன்றைக்கு ஒன்றியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஜுவல் ஓரம் அவர்கள் இதைப் பாராட்டியிருக்கிறார்.

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்  டோக்கன் சாகு அவர்கள் இதைப் பாராட்டியிருக்கிறார்.

நீதியரசர் செல்லமேஸ்வர், உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி, இந்தப் புத்தகத்தைப் பாராட்டியி ருக்கிறார்.

கருநாடகத்தின் மேனாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா அவர்கள் பாராட்டியிருக்கிறார்.

கே.கே.வேணுகோபால், இந்தியாவின் மேனாள் தலைமை வழக்குரைஞர், ராஜீவ் தவான், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்; ராஜீவ் பிரதாப் ரூடி, ஒன்றியத்தின் மேனாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், நீதியரசர் வினோத் பரத்வாஜ், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சூசன் பிண்டோ, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விமல் குமார் (யாதவ்), சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன், மேனாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா.

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே
போகிறது.

த.வெ.க. அரசுக்கு எத்தகைய வன்மம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்!

இத்தகைய அறிஞர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் முதலமைச்சர்கள் எனப் பலரும் பாராட்டி யிருக்கக்கூடிய இந்த ஆய்வுத் தொகுப்பு நூல், இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்காத அளவுக்குச் செய்யப்பட்டிருக்கிறது என்றால், இந்த அரசுக்கு எத்தகைய வன்மம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

“மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை.

திராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவதைப் போல…

அதை அப்படியே நகலெடுத்துத்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையாகவும் வைத்திருக்கிறார்கள்.

எப்படித் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்களோ, அதேபோல திராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவதைப் போல, அப்படியே நகலெடுத்தி ருக்கிறார்கள்.

தி.மு.க. “மாநிலத்தில் சுயாட்சி” என்று சொன்னால், அவர்கள் “மாநிலத்தில் தன்னாட்சி” என்று சொல்லி யிருக்கிறார்கள். வார்த்தையை மட்டும் மாற்றியிருக்கி றார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!

“மாநிலத்தில் தன்னாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்று உங்கள் கட்சியின் கொள்கையை வைத்துக்கொண்டு, ஒன்றிய – மாநில அதிகாரங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவைக் கலைத்திருக்கிறீர்களே!

கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுகிறது!

நீங்கள் மாநிலத் தன்னாட்சியைப் பற்றிக் கொண்டி ருக்கக்கூடிய கொள்கையில் இன்னும் உறுதியாக இருக்கிறீர்களா என்ற கேள்விதான் இந்தக் குழுவைக் கலைத்ததன் மூலமாக எழுந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த அறிக்கையில் நிறைய அத்தியாயங்கள் இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமான இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்துக்கூறி என்னு டைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

அண்ணன் பேராசிரியர் நாகநாதன் அவர்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய இந்தக் குழுவில் பல முக்கியமான அத்தியாயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, இன்றைய அரசியல் சூழலுக்குத் தொடர்புடைய பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் எந்தவிதமான வரைமுறையும் இல்லாமல், யார் வேண்டுமானாலும், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கட்சி மாறிச் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

அப்படிப்பட்டவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இல்லாத காலகட்டம் அது.

ஒய்.பி.சவான் குழு!

அந்தக் காலகட்டத்தில் முதன்முதலாக ஒய்.பி.சவான் குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் தினேஷ் கோஸ்வாமி குழுவும் அமைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 1967 – 1968 காலகட்டத்தில், ஓராண்டுக்குள் மட்டும் 438 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள். 116 பேர் ஒன்றிய அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

அப்போது இந்தக் குழுக்களின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் நான் சொல்ல வருகிறேன்.

அன்றைக்கு ஒய்.பி. சவான் குழு இருந்த கார ணத்தினாலும், அதன் பரிந்துரைகள் இருந்த கார ணத்தினாலும்தான் கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) கொண்டுவரப்பட முடிந்தது.

அதேபோல, 1990 ஆம் ஆண்டு தினேஷ் கோஸ்வாமி குழு அமைக்கப்பட்ட பிறகு, கட்சித் தாவல், வாக்குப்பதிவு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகள் அளிக்கப்பட்டன.

தினேஷ் கோஸ்வாமி குழுவின் அறிக்கை!

இன்றைக்கு தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கட்சித் தலைவர்கள் சொன்ன கட்டளையை மீறி வாக்களித்திருக்கிறார்கள் அல்லவா? இதையெல்லாம் அன்றைக்கே தினேஷ் கோஸ்வாமி குழு ஆய்வு செய்து அறிக்கைகள் கொடுத்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாகத்தான், இன்றைக்கு “குதிரை பேரம், குதிரை பேரம்” என்று சாதாரண சாமானிய மக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பேசக்கூடிய அளவுக்கு நிலைமை உருவாகியிருக்கிறது.

அதற்குக் காரணம் என்ன?

இந்தக் குதிரை பேரம் என்று நாம் சொல்லுகிறோமே, அதற்குச் சட்டப்படி தண்டனை வழங்குவதற்கு அதிகாரம் இருக்கிறதா? நீதிமன்றங்களுக்கே இவற்றை விசாரித்துத் தண்டிப்பதற்கான சட்டப்பிரிவுகள் இருக்கின்றனவா என்று கேட்டால், இல்லை.

சிட் ஃபண்ட்  ஒழுங்குமுறைச் சட்டம்!

நம்ம ஊரில், யாராவது ஒருவர் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் பணம் கட்டியிருப்பார். அந்தப் பணத்தை வசூலிப்பதற்காக, குறிப்பிட்ட தேதியில் அந்த நிறு வனத்தினர் சரியாக வந்து வசூல் செய்வார்கள்.

ஆனால், அந்தப் பணம் முதிர்வடைந்த பிறகு, அதாவது முதிர்வுத் தொகையைப் பெறுவதற்காக நாம் போனால், அன்றைக்கு அந்த நிறுவனம் இருக்காது.

எத்தனையோ நிறுவனங்கள் காணாமல் போயி ருக்கும். கஷ்டப்பட்டு வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிப் பணம் கட்டியிருப்போம். அந்தப் பணம் கொள்ளை போயிருக்கும்.

ஆனால், அவற்றையெல்லாம் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகச் சிட் ஃபண்ட்  ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதே மாதிரிதான், இன்றைக்குக் குதிரை பேரம் என்று சொல்லும்போது, கட்டுக்கட்டாகப் பணம் கைமாறுகிறது.

பணம் மட்டும் கைமாறுவதில்லை. பதவிகளும் கொடுக்கப்படுகின்றன. அமைச்சரவையில் இடம் கொடுக்கிறேன் என்று பேரம் பேசுகிறார்கள்.

ஆனால், இதையெல்லாம் இந்தக் குழு முன்கூட்டியே சிந்தித்து, ஆய்வு செய்து, இவற்றைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

இப்படிக் கட்சி மாறி, கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக வாக்களிக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் இந்தக் குழு அளித்திருக்கிறது.

ஆசிரியர் அய்யா அவர்களே!

என்ன காரணத்திற்காக இந்தக் குழுவைக் கலைத்தார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

குதிரை பேரத்திற்காக மட்டுமே
ஒரு தனி அத்தியாயம்!

ஆனால், இந்தக் குழுவின் முதல் தொகுப்பைப் படித்துப் பார்க்கும்போது, குதிரை பேரத்திற்காக மட்டுமே ஒரு தனி அத்தியாயத்தை எழுதி, எட்டாவது பரிந்துரையாக இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இதைப் படித்துப் பார்த்து அவர்கள் பயந்துவிட்டார்கள். இதுதான் காரணம் என்று நான் கருதுகிறேன்.

இதுவே மிகப்பெரிய காரணம்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, இந்தப் பரிந்துரைகள் வெளிவந்திருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து வந்தவர்தான் தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர்!

இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதற்காகத் தமிழ்நாட்டில் ஓர் அமைச்சரவை இருக்கிறது. அதில் ஓர் அமைச்சர் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து பொறுப்பேற்க வந்தவர்தான் தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர்.

இந்தச் சட்ட அமைச்சர்தான் இந்த ஆணையத்தைக் கலைக்கும் அரசாணையைக் கொண்டுவந்தார்.

இந்த அரசாணை கொண்டுவரப்பட்ட காலகட்டம் என்னவென்று சொன்னால், நூலகங்களில் எல்லாம் ஊழல் நடந்ததாக ஒரு ‘பூதாகரமான’ செய்தி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகப் பரப்பப்பட்டுக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், 6.11.2026 அன்று, எந்தவிதமான சத்தமும் இல்லாமல் இப்படிப்பட்ட ஓர் அரசாணையை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

பெரியார் திடலிலிருந்து
நீங்கள் தப்பிக்க முடியாது!

ஆனால், யாரிடமிருந்து வேண்டுமானாலும் நீங்கள் தப்பிக்கலாம், இந்தப் பெரியார் திடலிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது.

திராவிட இயக்கங்களிடமிருந்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைவாதிகளிடமிருந்தும் நீங்கள் தப்பிக்க முடியாது.

அந்தக் காரணத்தினால்தான், நம்முடைய ஆசிரியர் அவர்கள் இந்தக் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தி ருக்கிறார்கள்.

இது நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் மத்தியில், கல்வியாளர்கள் மத்தியில், பேராசிரியர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் கருத்தரங்குகளாக நடைபெற வேண்டும்.

‘நீட்’ தேர்வே கூடாது என்பதுதான்
நம்முடைய கோட்பாடு!

இந்த நீட் தேர்வைப் பற்றி நாம் இன்றைக்குப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நீட் தேர்வே கூடாது என்பதுதான் நம்முடைய கோட்பாடு, நம்முடைய வாதம், நம்முடைய நிலைப்பாடு.

இன்றைக்கு காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் டில்லியில் ஒன்றுசேர்ந்து போராடுகிறபோது, நீட் தேர்வு முறைகளைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களைச் சந்தித்த பிறகுதான், அவர்களுக்குள்ளேயே நீட் தேர்வு என்கிற முறையே தவறானது என்ற கருத்து உரு வாகியிருக்கிறது.

இது இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய நிலைப்பாட்டை ஏற்படுத்தும், அதிர்வலை களை உருவாக்கும்.

எனவேதான், இந்தப் பதற்றத்தின் காரணமாகவே இந்தக் குழுவைக் கலைத்திருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

முதலில் வரவேற்றது
பாரதீய ஜனதா கட்சிதான்!

இந்தக் குழுவைக் கலைத்ததை முதலில் வர வேற்றது யார் என்று சொன்னால், பாரதீய ஜனதா கட்சி யிலிருந்துதான் அதற்கான வரவேற்பு வந்திருக்கிறது.

அப்படியானால், பா.ஜ.க. கொடுக்கின்ற பணிகளை இங்கே செயல்படுத்தி, நடைமுறைப்படுத்துகின்ற ஒரு பா.ஜ.க.வின் மாதிரி அரசாங்கம்தான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுப் பிரிவு,
தமிழக வெற்றிக் கழகம்!

எனவே, விஜய் அவர்களே!

நீங்கள் தமிழக வெற்றிக் கழகம் என்று சொல்லிக்கொள்வதைவிட, பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுப் பிரிவு என்று உங்களை அறியாமல்  ஒருமுறை நீங்கள் பேசும்போது வெளிப்பட்டுவிட்டது.

‘‘நாங்கள் தனிக்கட்சி அல்ல; பாரதிய ஜனதா கட்சியின் ஒரு கிளைதான்’’ என்று நீங்கள் அறி விக்கவில்லை என்றாலும்கூட, நாட்டு மக்கள் உங்களுடைய செயல்பாடுகளின் காரணமாக அதைப் புரிந்துகொள்வார்கள் என்பதைச் சொல்லிக்கொண்டு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நெஞ்சார்ந்த நன்றி!

எனக்கு இந்த வாய்ப்பை நல்கிய ஆசிரியர் அவர்களுக்கும், சான்றோர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற இன்னும் பல கருத்தரங்குகளில் பேசுகின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைக்கும்.

அப்போது ஒவ்வொரு பகுதியையும் தனித்தனி யாக எடுத்துக்கொண்டு, மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

– இவ்வாறு தி.மு.க. வழக்குரைஞரணி இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *