
பொத்தனூர், நவ.17 15.11.2026 அன்று ஞாயிறு இரவு மறைந்த சுயமரியாதைச் சுடரொளி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் (அகவை104)அவர்களின் மறைவிற்கு புகழ் மாலை சூட்டி வீரவணக்கக் கூட்டம் 16.11.2026 திங்கள் மாலை 2.30 மணியளவில் பொத்தனூர் க.ச.இல்லத்தில்நடைபெற்றது.
கூட்டத்திற்கு திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்கி வீரவணக்க உரை யாற்றினார் அவரது உரையில் “ஒரே கொடி,ஒரே தலைவர், ஒரே கொள்கை “என்று உறுதியுடன் இறுதிநாள் முழுவதும் வாழ்ந்து நமக்கு வழிகாட்டிய தலைவர் பொத்தனூர் க.ச.” என்றும், அவர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவராக இருந்தபோதும் ஆற்றிய பணி, இயக்கத் தொண்டறப்பணிகள் எத்தனை நாள் பேசினாலும் அது நீண்டுகொண்டே செல்லும் அவ்வளவு பெருமைக்கு உரியவர் நம் அய்யா க.ச.என்றுகுறிப்பிட்டார்

அதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை ஜெயக்குமார், ஊமை ஜெயராமன், மாநில தொழிலாளரணிச் செயலாளர் சேகர், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், பேராசிரியர் ப.காளிமுத்து, கழகக் காப்பாளர்கள் பழனி புள்ளையண்ணன்,கவிஞர் சுப்பிரமணியம், திருச்செங்கோடு மாவட்டத் தலைவர் சரவணன், நாமக்கல் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பெரியசாமி, கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி, ப.க. மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோவன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் அசேன், பேரூராட்சித் தலைவர் ஆர்.கருணாநிதி, பவுன்ராஜ், விவசாய சங்கம் செந்தில்நாதன், காங்கிரஸ்செல்வி மணி, நாங்கள் இயக்கம் அன்பழகன், தோழர் களம் சண்முகம், சிபிஎம் செல்வராஜ், கபடி பழனியப்பன், ஏகம்பன், லதா பேபி, க.ச.வின் கொள்ளுப் பெயர்த்தி தாமரைஆகியோர் தங்களது இரங்கல் உரையில் க.ச.அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோதுபொத்தனூருக்கு செய்த எண்ணற்ற மக்கள்நலப் பணிகள், சமூகப்பணிகள், 1944-இல் இயக்கத்தில் இணைந்ததிலிருந்து ஆற்றிய தொண்டறப் பணிகள் – தனக்கென வாழாமல் மக்கள் நலன் – இயக்க நலனில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டதைநினைவுகூர்ந்து புகழ் மாலை சூட்டினார். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஊர் பொதுமக்கள்,அனைத்துப்பகுதிகளிலிருந்து வருகை தந்த அனைத்துக்கட்சியை சார்ந்த பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகள் – இயக்கங்களின் பிரதிநிதிகள் சாரைசாரையாக வருகை தந்து புகழ் மாலை சூட்டி வீரவணக்கத்தையும் தெரிவித்தனர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களது வீரவணக்க உணர்ச்சிஅறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன் வாசித்தார். அந்த உரை ஆயிரக்கணக்கில் நகல் எடுத்து வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் க.ச.வின் உடலை தோழர்களுடன் சுமந்து வண்டியில் ஏற்றினார். அனைவரும் பெரியார் வாழ்க! பெரியார் தொண்டர் க.ச.வாழ்க! என்று தொடர் முழுக்கமிட்டனர். பொத்தனூரிலிருந்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரது “உடல் கொடை” அவரது விருப்பத்தின்படி அவரது மகன் செங்குட்டுவன் – சாந்தி, மகள்கள்தமிழரசி – விவேகானந்தன், மலர்க்கொடி ரவீந்திரன், மற்றும் பேரன் கலைமணி, பெயர்த்தி குந்தவை ஆகியோர் முன்னிலையில் கழகக் காப்பாளர்கள் பழனி. புள்ளையண்ணன், கவிஞர் சி.சுப்பிரமணியம், திருச்சி பெரியார் வளாகப் பொறுப்பாளர் தங்காத்தாள்ஆகியோர் முன்னிலையில் மருத்துவக்கல்லூரிக்குஅளிக்கப்பட்டது. காலை முதல் இறுதி வணக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்:
மாநில தொழிலாளரணி துணைச் செயலாளர் வீரமுருகன், திருச்சி மேனாள் ஆசிரியர் பயிற்சி முதல்வர் ப.சுப்பிரமணியம், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜ், கரூர் வழக்குரைஞர் ராசசேகரன், திராவிட சரவணன். ஈரோடு மாவட்டதலைவர் து. நல்லசிவம், காப்பாளர்கள் இரா. நற்குணன், சிவகிரி சண்முகம், மாநகரத் தலைவர் காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் பாலகிருட்டிணன், கோ.திருநாவுக்கரசு, ப.சத்தியமூர்த்தி, தமிழ்ச்செல்வன், ராஜேஸ்வரி, கோபி மாவட்டக் காப்பாளர் சிவலிங்கம், க. யோகானந்தம் வழக்குரைஞர் சூரியா, சிவபாரதி, சண்முகசுந்தரம், கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், ஈட்டி கணேசன், கரூர் மாவட் டச் செயலாளர் காளி முத்து, சேலம் இளவழகன், தமிழர் தலைவர், போலீஸ் ராசு, டாக்டர் ராஜேந்திரன், அரங்க இளவரசன், ராவண பூபதி. நா. விடுதலை விரும்பி, சி. மதியழகன், ப.கலைவாணன், பு. வீரமணி, ரேவதி, வழக் குரைஞர் குடியரசு, சபாபதி ச.மோகன், கவிஞர் கடவூர் மணி மாறன், தமிழன் குமாரசாமி, நீ.சேகர், ஓமலூர் சவுந்திரரான், சாந்தி,ரஞ்சிதம், ராஜேந்திரன், ராஜேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, ப.ராமச் சந்திரன், கா.மதிவாணன், பெ.சக்திவேல், பழ.பரமசிவம், பெருமாள், விடுதலை, கவுதமன், அய்யப்பன், சேலம் வைரம், பரமத்தி செங்கோடன், குமாரபாளையம் ஆ.கு.குமார், ராசசேகரன், மு.சீனிவாசன்,சேகர், ஆனந்தகுமார், வெ.மோகன், கி.நந்தகுமார், த.பவுன்ராஜ்,மு.ராஜசேகரன், இல.ப.செல்வகுமார், மேட்டூர் நேரு, சீனிவாசன், அண்ணாதுரை, சிறீதர், சதிஷ்குமார் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
