பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிக்கு சென்னையில் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.27 சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கைப் பணி களுக்காகப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள் போன்ற அவசரகாலப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்டப் பணிகளோடு கூடுதலாக அமைச்சர்கள் சிலருக்குப் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் பொறுப்பு அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்பு அமைச்சர்கள் விவரம்:

  1. அமைச்சர் எஸ். ரமேஷ்:

திருவொற்றியூர் – மண்டலம்-1

மணலி – மண்டலம்-2

  1. அமைச்சர் லோகேஷ்

தமிழ்செல்வன்:

மாதவரம் – மண்டலம்-3

தண்டையார்பேட்டை

– மண்டலம்-4

  1. அமைச்சர் அருண்ராஜ்:

இராயபுரம் – மண்டலம்-5

திரு.வி.க.நகர் – மண்டலம்-6

  1. அமைச்சர் விஜய் பாலாஜி:

அம்பத்தூர் – மண்டலம்-7

அண்ணாநகர் – மண்டலம்-8

தேனாம்பேட்டை –

மண்டலம்-9

  1. அமைச்சர் டிகே பிரபு:

கோடம்பாக்கம் – மண்டலம்-10

வளசரவாக்கம் – மண்டலம்-11

  1. அமைச்சர் விஜய் தமிழன்

பார்த்திபன்:

ஆலந்தூர் – மண்டலம்-12

அடையார் – மண்டலம்-13

  1. அமைச்சர் க. விக்னேஷ்:

பெருங்குடி – மண்டலம்-14

சோழிங்கநல்லூர் – மண்டலம்-15

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *