மேகதாது அணைக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடச் சென்ற விவசாயிகளை நடுவழியில் கைது செய்வதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 3- மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கருநாடக அரசை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாடு விவசாயிகளை கைது செய்திருப்பதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக உள்ள காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை.

இதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காவிரி நீர் ஆதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கருநாடக அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல விவசாய சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அய்க்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சங்கரய்யா தலைமையில் டில்லியில் போராட்டம் நடத்துவதற்காக சென்னையில் இருந்து டில்லிக்கு சென்றவர்களை நாக்பூரில் ரயிலிருந்து கீழே இறக்கி கைது செய்துள்ளனர்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையை பறிக்கும் வகையில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவித்து அவர்கள் டில்லி செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *