பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய
பெரியார் புரா மற்றும் உன்னத் பாரத் அபியான் கிராமங்களில்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம் 27.10.2026 முதல் 31.10.2026 வரை உன்னத் பாரத் அபியான் மற்றும் பெரியார் புரா கிராமங்களான பாளையப்பட்டி தெற்கு, புதுக்குடி, திருவிழாப்பட்டி, இராயமுண்டான்பட்டி, மனையேறிப்பட்டி, அய்யாசாமிப்பட்டி, திருவேங்கடவுடையான்பட்டி, மாதுரான்புதுக்கோட்டை, வல்லம் மற்றும் சென்னம்பட்டி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை ஒன்பது கருப்பொருள்கள் மூலம் நிர்ணயித்து கிராம ஊராட்சித் திட்டங்கள் மூலம் நிறைவேற்ற முற்பட்டு வருகின்றது. இதை அடிப்படையாக கொண்டு இந்த அய்ந்து நாள் கிராமிய முகாமும் ஒன்பது கருப்பொருள்களை மய்யமாக கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

முதல் நாள் நிகழ்வு – ‘நலமான மக்கள் வளமான கிராமம்’
உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு-2:
நல வாழ்வு கிராம ஊராட்சி
சுகஜீவன் மருத்துவ மனையோடு இணைந்து பாளையப்பட்டி தெற்கில் 27.10.2026 அன்று காலை 10 மணியளவில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர் பேரா.புவனேஸ்வரி மற்றும் பாளையப்பட்டி தெற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கமலதாசன் இணைந்து கிராமிய முகாமைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிருவனம் கட்டடக்கலைத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் லதா மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அரசு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் .கார்தியாயினி மற்றும் த.வெ.க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தமிழ்வாணன் மற்றும் மதி மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மருத்துவ முகாமை சிறப்பித்தனர்.
இம்மருத்துவ முகாமின் மூலம் மொத்தம் நூற்றுபதிமூன்று பயனாளிகள் பயன்பெற்றனர். கிராமப்புற மக்களிடையே உடல்நலம் குறித்த விழ்ப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மருத்துவ சேவைகளை எளிதில் பெறுவதற்கும் இம்முகாம் பயனுள்ளதாக அமைந்தது.
முதல் நாள் மாலை நிகழ்வு – 2
பாளையப்பட்டி தெற்கில் மாலை 6.00 மணியளவில் ஆரோக்கியமே ஆனந்த வாழ்வின் அடித்தளம் என்ற தலைப்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கண்கானிப்பாளர், நிலை II, கு.முருகப்பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள், நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். இதில் 50 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இரண்டாம் நாள் காலை நிகழ்வு
மக்கள் நலமே மகத்தான வளர்ச்சி
உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு – 8:
அய்யாசாமிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சமூகப்பணித்துறை மாணவர்கள் கிராமம் தோறும் ஆதார் சேவை என்ற தலைப்பில் ஆதார் புதிய பதிவுகள் மற்றும் திருத்தங்கள் செய்து தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செங்கிப்பட்டி அஞ்சல் அலுவலர் இரா.சபரிஷ் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து வந்து கிராம பொதுமக்களுக்கு ஆதார் சேவைகளை வழங்கினார். இதில் 54 நான்கிற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.
இரண்டாம் நாள் மாலை நிகழ்வு
மக்களுக்கான திட்டங்கள் – முன்னேற்றத்திற்கான பாதைகள் என்ற தலைப்பினை மய்யமாக கொண்டு மாலை 6.00 மணியளவில் மாதுரான்புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகப்பணித்துறை மாணவி சக்திசிறீ வரவேற்புரை வழங்கினர். சமூகப்பணித்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர் த.அலமேலு அறிமுக உரையில் மக்களுக்கான அடிப்படைத் திட்டங்கள் பற்றியும் திட்டத்தின் நோக்கத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக தொன் போஸ்கோ மாதிரிப் பண்னை திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.அண்டோமைக்கில் ராஜ் சிறப்புரையாற்றினார். மேலும் அவர்தம் உரையில் பெண்குழந்தைகளுக் கான திட்டங்கள் முதியோர்களுக்கான திட்டங்கள் பற்றியும் அதன் முக்கியத்து வத்தையும் எடுத்துரைத்தார்.
இதில் மக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிவுப் பெற்றனர். இறுதியாக சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி மு.விஷ்ணுபிரியா நன்றியுரையாற்றினார்.
மூன்றாம் நாள் காலை நிகழ்வு
“மனிதநேயம் வழியே – சமூக நீதி”
உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கு இலக்கு – 7
சமூகநீதி, சமூகப் பாதுகாப்பு நிறைந்த கிராம வளர்ச்சி
காலை நிகழ்வாக மனிதநேயம் வழியே சமூக நீதி (29.10.2026) அன்று இராயமுண்டான்ப்பட்டி அரசு சமூக உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி நடை பெற்றது.
.சரளாஅசோகன் ஒன்றுப்பட்ட மாணவர்கள் சமத்துவமான சமூகம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சம வாய்ப்பு மற்றும் சம கல்வியை பற்றி உரையாற்றினார். இதில் கல்வி தமது வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியமாக திகழ்ந்தது என்பதையும் தனது வாழ்க்கையை உதாரணமாகவும் எடுத்துக் கூறினார்.
மேலும் இறுதியாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் முனைவர் து.ரமேஷ் மற்றும் சந்துரு அரசு உயர்நிலைப் பள்ளி இராயமுண்டான்பட்டியில் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுத் துணைக்கருவிகளை வழங்கினார்.
மாலை நிகழ்வு 1
சமூகப்பணியும் – சமூகப் பொறுப்பும்
இராயமுண்டான்பட்டியில் மனிதநேயம் வலியே சமூக நீதி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு சமூகப்பணித்துறை மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரை ஆற்றிய பணியாளர் சைல்டு ஹெப்ட்லைன் இருந்து சமூகப்பணித் துறை மாணவர்களுக்கு சமூகம் பணியும் – சமூகப் பொறுப்பும் என்ற தலைப்பில் தனது உரையை ஆற்றினார்.
அவர் தம் உரையில் குழந்தைகள் நல அமைப்பு பற்றியும் சட்டங்கள் பற்றியும் நடப்பு சிக்கல்கள் அதனை கையாளும் முறை பற்றியும் சமூகப்பணித்துறை மாணவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
மூன்றாம் நாள் மாலை நிகழ்வு -2
சமத்துவம் கற்போம் – சமூகத்தை வளர்ப்போம்.
மனையேறிப்பட்டி மாலை நிகழ்வாக சமத்துவம் கற்போம் சமூகத்தை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்றிய செட் இண்டியா திட்ட இயக்குநரான பா.ஜெய் எடில்பர்ட் தனது உரையை ஆற்றினார்.
நான்காம் நாள் காலை நிகழ்வு
தூய்மையான கிராமம் – வளமான வாழ்வு
உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு – 5:
தூய்மையான மற்றும் பசுமையான கிராம ஊராட்சி
காலை நிகழ்வாக பசுமை விதைப்போம் வளமான கிராமம் படைப்போம் என்ற தலைப்பில் கீழதிருவிழாப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் வனச்சரகர் அலுவலர் தனலெட்சுமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தையும் மண் வளம் காப்பதின் இன்றியமையையும் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாலை நிகழ்வு-1
மொழித்திறன் வளர்ப்போம் – தூய்மையான கிராமம் உருவாக்குவோம்
மாலை நிகழ்வாக புதுக்குடியில் “மொழித்திறன் வளர்ப்போம் – தூய்மையான கிராமம் உருவாக்குவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உளவியல் வல்லுநர் ஆலோசகர் ஜெயகலா ரமேஷ்குமார் சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் சுயமாகச் சிந்தித்தல் மற்றும் சுயமாக முடிவெடுத்தல் என்பதன் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். இதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் (பொ) பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் உரையாற்றினார். அவர் தமது உரையில் கிராமத்தின் முழுமையான வளர்ச்சிக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள், டிஜிட்டல் வசதிகள், அறிவு வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பற்றி கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.
மேலும் அப்பள்ளிக்கு விளையாட்டுத் துணைக் கருவிகள் உபகரணங்கள் வழங்கினார்.
மாலை நிகழ்வு-2
நம் ஊர் – நம் பொறுப்பு : நம் சுற்றுசூழல் நம் எதிர்காலம்! என்ற தலைப்பை மய்யப்படுத்தி மாலை 6.00 மணி முதல் விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தூய்மை பாரத இயக்கம், தகவல் கல்வி தொடர்பு ஆலோசகரான ரா.வெங்கட்ராமன் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கான காரணங்களை பற்றியும் கிராமங்களில் சுகாதாரத்தைப் பேணும் முறைகளை பற்றியும் கூறினார். அதில் அவர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்களிப்பு பற்றி மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
அய்ந்தாம் நாள் காலை நிகழ்வு
குழந்தைகளின் வளர்ச்சி கிராமத்தின் எழுச்சி
உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு 3:
குழந்தைகள் நேய கிராம ஊராட்சி
அய்ந்தாம் நாள் நிகழ்வான ‘குழந்தைகளின் வளர்ச்சி கிராமத்தின் எழுச்சி’ என்ற தலைப்பின் கீழ் கையெழுத்துப் பிரச்சாரம் வல்லம் பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணி அளவில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கழகத்தின் பதிவாளர் முனைவர் பு.கு.சிறீவித்யா மற்றும் முனைவர் பொ.விஜயலெட்சுமி ஒருங்கிணைப்பாளர் அவர்களும் மற்றும் வல்லம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் துரை தனவேந்தன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட மகளிர் உரிமை சமூகப் பணித்துறை, க.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுப் பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கையெழுத்தைப் பதிவு செய்தனர். பின்னர் சமூகப்பணித்துறையின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே உணர்ச்சி பூர்வ பாடல்கள் வழியாகவும் கருத்து மிக்க சமூகப்பணித்துறை மாணவர்கள் கருத்து மிக்க தெருக்கூத்துக்களின் வழியாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாலை நிகழ்வு-1 குழந்தைப் பருவத்தில் கல்வி வாழ்நாள் முழுவதும் அறிவாளி
இரண்டாம் நிகழ்வான “குழந்தைப் பருவத்தில் கல்வி வாழ்நாள் முழுவதும் அறிவாளி” என்ற தலைப்பில் சென்னம்பட்டியில் உள்ள கிராம சேவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் கணினிப் பயன்பாட்டுத்துறை உதவிப் பேராசிரியர் கார்த்திக் சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கணினிப் பயன்பாட்டுத் துறை மாணவர்கள் கணினிப் பயன்பாடு இணையப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு எளிய முறையில் எடுத்துரைத்தனர். இதில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.
மாலை நிகழ்வு – 2 நிறைவு விழா
கிராமிய முகாமின் நிறைவு விழா சென்னம்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சமூகப்பணித்துறை மாணவி பி.ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். இதை தொடர்ந்து சமூக பணித்துறையின் முதுநிலை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.பரமேஸ்வரன் அறிமுகவுரை வழங்கினர். அவர் தம் உரையில் கிராமிய முகாமின் சமூகப்பணித்துறை மாணவர்களின் பங்கு குறித்து விளக்கினர். அதனை தொடர்ந்து முனைவர் மதுரை கு.சந்திரன் இன்றைய குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சி நாட்டின் சமூக வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சாதக பாதகங்களை பல்வேறு கருத்துகள் அடங்கியப் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் பூதலூர் த.வெ.க ஒன்றியச் செயலாளர் தமிழ்வாணன் அய்ந்து நாட்களில் சமூகப்பணி துறை மாணவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சினை மக்கள் பங்கேற்போடு மிகுந்த அர்ப்பணிப்போடு செய்ததாக கூறி வாழ்த்துரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக அய்ந்து நாள் கிராமிய முகாமின் அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராமிய குழந்தைகள் மற்றும் சமூகப்பணி துறை மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியின் சமூகப்பணி துறை மாணவி ஜே.வைஸ்லின் ஜென்சியாமேரி நன்றியுரை வழங்கினார். நிறைவு விழாவில் 100 க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கிராமிய முகாமின் அறிக்கை
இந்த அய்ந்து நாள் சமூகப்பணி துறை மாணவர்களின் கிராமிய முகாமில் பள்ளி மாணவர்கள் பெண்கள், மகளிர் நலன், வனம், ஆதார், குழந்தைகள் நலம் சுற்றுச் சூழல் பேணல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்றும் சுமார் 3000 மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயனடைந்தனர்.
