விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஆக.26- 11ஆம் வகுப்பு டி.யோகதர்ஷினி குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 100மீ, 100மீ Hurdles, 200மீ, 4×100 mts Relay போன்ற அனைத்து போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று Individual Championshipக்கான கோப்பையையும் வென்றார்.

10ஆம் வகுப்பு மாணவி எஸ்.சங்கமித்ரா குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 200மீ ஓட்டப் பந்தயத்தில் 3ஆம் இடமும், 400மீட்டரில் 2ஆம் இடமும், 800 மீட்டரில் முதல் இடமும் மற்றும் 4×100 mts Relayயில் முதலாம் இடம் பிடித்து பதக்கத்தையும் சான்றிதழையும் வென்றார்.

11ஆம் வகுப்பு எம்.வர்ஷா மற்றும் எ.ரிஃபானா குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 4x100mts Relayயில் முதலாம் இடம் பிடித்து பதக்கத்தையும் சான்றிதழையும் வென்றார்.

குறுவட்ட அளவில் முதல் இடம் வென்ற டி.யோகதர்ஷினி, எஸ்.சங்கமித்ரா, எம்.வர்ஷா மற்றும் எ.ரிஃபானா மாவட்ட அளவிலான தடகளப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

9ஆம் வகுப்பு மாணவி என். ஹாசினி மற்றும் டி. ஹரிணி, 8ஆம் வகுப்பு மாணவி கே.ரேச்சல் மற்றும் எஸ். நிரஞ்சனா 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான 4×100 mts Relayயில் மூன்றாம் இடம் பிடித்து பதக்கத்தையும் சான்றிதழையும் வென்றார்.

10ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஹரிணிப்ரியா குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 100மீ Hurdlesஇல் 3ஆம் இடம் பிடித்து பதக்கத்தையும் சான்றிதழையும் வென்றார்.

12ஆம் வகுப்பு ஜெ.சிவசிறீ குறுவட்ட அளவில் நடைபெற்ற தட்டு எறிதல் (Discuss throw) போட்டியில் இரண்டாம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்றார்.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *