வல்லம், அக்.7- வல்லம், பெரியார் ஃபவுண்டேசன் ஃபார் பிரி-இன்குபேசன் (Periyar Foundation for Pre-incubation) சார்பாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 25.09.2026 வெள்ளிக்கிழமை அன்று “இன்னோவேசன் அய்டியாத்தான்” (Innovation Ideathon) போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மொத்தம் 58 அணிகள் பதிவு செய்தனர். 56 அணிகள் கலந்து கொண்டனர். இதில் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 16 அணிகளும், பிற கல்லூரிகளில் இருந்து 40 அணிகளும் பங்கேற்றனர்.
முதல் பரிசை தஞ்சாவூர் பான் சேக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவி எம்.அகல்யா மற்றும் அவர்களுடைய குழுவினர் “Green Hydrogel Hyacinth-X” என்ற தலைப்பிலும் மற்றும் திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் மாணவி எஸ்.மதுமிதா மற்றும் அவர்களுடைய குழுவினர் பார்வையற்றோருக்கான ஏஅய் (செயற்கை நுண்ணறிவு) உதவி அமைப்பு பற்றி எடுத்துரைத்து முதல் பரிசை இரு அணிகளும் பெற்றார்கள்.
இரண்டாம் பரிசை நாகப் பட்டினம் ஆரிஃபா தொழில்நுட்பக் கல்லூரி மாணவி எம்.ஹேமதர்ஸ்சினி மற்றும் அவர்களுடைய குழுவினர் “VigilantX–Autonomous Cyber Defence” என்ற தலைப்பிலும் மற்றும் பான் சேக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி பி.சரோ ரக்சிதா மற்றும் அவர்களுடைய குழுவினர் “Intelligent Food Vending and Real Time Inventory System” என்ற தலைப்பில் பங்கேற்று இரண்டாம் பரிசை இரு அணிகளும் பெற்றனர்.
மூன்றாம் பரிசை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி எஸ்.பி.ஹர்சினி அவர்களுடைய குழுவினர் “Smart Conveyor for Mines” என்ற தலைப்பிலும் திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் மாணவி ஏ.அபி ஏஞ்சலின் மற்றும் மற்றும் அவர்களுடைய குழுவினர் “Handy Talk” என்ற தலைப்பிலும், டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரி மாணவர் ஆர்.ரெனிஸ்டன் மற்றும் அவர்களுடைய குழுவினர் “Freight Match” என்ற தலைப்பில் பங்கேற்று மூன்றாம் பரிசை மூன்று அணிகளும் பெற்றனர்.
சிறப்புப் பரிசை புதுக்கோட்டை சுப்பிரமணியன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பி.அனுஸ்கா மற்றும் அவர்களுடைய குழுவினர் “Low Cost Point of Care Diagnostic Device” என்ற தலைப்பிலும் மற்றும் ராயவரம் SPTC Startup TN Foundation மாணவர் எஸ்.விஜயன் “Series Hybrid EV- Bike” என்ற தலைப்பில் பங்கேற்று இரு அணிகளும் சிறப்புப் பரிசைப் பெற்றனர்.
இப்போட்டிக்கு Startup TN-இன் Dr. P.Karuppanan, (புராஜெக்ட் லீட்), எஸ்.மகேஷ் குமார், (புராஜெக்ட் அசோசியேட்), டி.அய்ஸ்வரன் (“Product and System Architect, Fintech Solution, Trichy”) மற்றும் எஸ்.தினேஷ் தனபாலன் (“Manager Arifa Innnovation and Incubation Council, Nagapattinam”)ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று மாணவர்களின் திறமைகளை பாராட்டி மாணவர்களுக்கு ஆலோ சனைகளை வழங்கினார்கள்.
Pre-incubation தலைமை செயல் அதிகாரி முனைவர் க.ரோஜா, Pre-incubation மேனஜர் ஜே.பிரவீன் ராஜ் மற்றும் Pre-incubation அசோசியட் க.கோபி ஆகியோர் இந்நிகழ்ச்சியை திட்டமிட்டு இந்நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி தலைமையேற்று மாணவர்களை தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள், இன்றைய உங்கள் யோசனை நாளைய சாதனையாகும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இறுதியாக மூன்றாமாண்டு கணினியியல் துறை மாணவி எம்.தாரணி இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் பங்கேற்ற மாணவர் களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவர்களும் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். விழா இனிதே நிறையுற்றது.
