பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான பெரியார் தொழில்நுட்பக் கருத்தரங்கு 2026

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தஞ்சாவூர், செப்.30- பெரியார் 148வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கில் தேசிய அளவிலான பெரியார் தொழில் நுட்பக் கருத்தரங்கு 03.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரியில் இணைய வழியாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பல்வேறு பாலிடெக்னிக்களி லிருந்தும் சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு தயாரித்து அனுப்பிய 80 கட்டுரைகள் வாசிக்கப் பட்டன.
மாணவ, மாணவிகளின் பரிசளிப்பு விழாவில் தலைமையுரை யாற்றிய இக்கல்லூரி முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி இந்த கருத்தரங்கு மாணவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பகிரிந்து கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.
பின்பு வாழ்த்துரை வழங்கிய இக்கல்லூரி துணை முதல்வர் முனைவர் க.ரோஜா பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதோடு இது போன்ற கருத்தரங்குகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் கட்டுரை வாசித்தளித்த மாணவர்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் ரூ. 1500 மற்றும் ரூ. 1000 ஆகிய பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் பரிசுகள் வென்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கும் கல்லூரியின் சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *