உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதுபோல் பட்டாசால் அதிகரிக்கும் மாசுகள் குறித்து கவலை கொள்ள தேவையில்லையா?

3 Min Read
- Advertisement -

செய்தி

லக்னோவில் ஒரு நிகழ்வில் பேசிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ”தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்தால் காற்று மாசு அதிகரித்துவிடுகிறது என சிலர் கவலை தெரிவிக்கிறார்கள். மாசு ஏற்பட்டாலும் அது சீக்கிரமாகவே குறைந்துவிடும். எனவே இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்” எனப் பேசியுள்ளார்.

பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் சுற்றுச்சூழல் மாசு குறித்து கவலை கொள்ள தேவையில்லையா என்பதை விடுதலை ஆய்ந்தறிவோர் குழு ஆய்வு செய்தது.

மெய்யா? பொய்யா?

ஆய்வு

கடந்த 8 ஆம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடித்ததில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உதாரணமாக சென்னையில், சேலத்தில்,  கோவையில் என தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நூறு டன்களுக்கு மேல் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கொண்டாட்டங்களால் உண்டான மாசு பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது. இவையாவும் அதிகளவில் உருவான குப்பைகள் மற்றும் ஒலி மாசு பற்றியவையாகும்.

இவையன்றி பட்டாசு வெடிப்பால் உண்டாகும் காற்று மாசு முக்கியமானது. தீபாவளி தினத்தில் இந்திய நகரங்களின் காற்று மாசு மிகவும் மோசமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரியங்களால் கணக்கிடப்பட்டு வெளியான காற்றின் தரம் குறித்த அளவீடுகள் அபாய கட்டத்தை தாண்டியும் இருந்தது.

காற்றின் தரமதிப்பீட்டின் படி(AQI) 0-50 வரை இருந்தால் நலம் எனவும் 51-100 திருப்திகரமானது எனவுன் 101-200 சுமார் எனவும்,201-300 மோசம் எனவும் 301-400 மிகவும் மோசம் எனவும், 401-500 என இருந்தால் தீவிர நிலை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நவம்பர் 9 காலை 7 மணி நிலவரப்படி டெல்லியில் 368 மிகவும் மோசமாகவும், லக்னோவில் 246, பாட்னாவில் 271,சென்னையில் 208 என மோசமான நிலையில் இருந்ததாக பதிவாகியுள்ளது.

ஒரு சில இடங்களில் தீபாவளி நாளன்று இடையிடையே 400 க்கு மேல் சென்றதாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்த செய்திகளில் காற்று மாசு அளவு தீபாவளிக்கு முன் நல்ல நிலையிலிருந்ததையும் தீபாவளி மற்றும் அதை தொடர்ந்த நாட்களில் உயர்ந்ததையும் அறியமுடிகிறது.

இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி டெல்லியில் தீபாவளிக்கு அடுத்த நாள் சுவாசிக்க உகந்ததற்ற காற்றின் அளவீடு(PM2.5) உயர்வுக்கு பட்டாசு வெடித்ததுதான் 71.1 காரணமென உறுதியாகியுள்ளது.

இந்த அளவில் காற்று மாசடைவது மிகவும் நேரடியாக நுரையீரல் பாதிப்பு மற்றும் இதய பாதிப்பு ஆகியவற்றை உருவாக்குகிறது என்பது நுரையீரல் நிபுணர்களின் எச்சரிக்கையாகும்.

பட்டாசு வெடிப்பதால் உருவாகும் குப்பைகளை பற்றிய குவான் லின் சென்,சென் கியான் உள்ளிட்ட அமெரிக்க வேதியல் குழுமத்தின்(American Chemical Society) ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் பட்டாசு குப்பைகளின் தீங்கான கழிவுகள் மண்ணில் சேர்வதால் நிலத்தடி நீரையும் பாதிப்பதாக தெரிவிக்கிறது.

விளக்கம்

பட்டாசு வெடிப்பதால் உருவாகும் ஒலி மாசு வயதானவர்கள், படுக்கை மருத்துவ பயனாளர்கள், வீட்டு விலங்குக்கு மிகுந்த அசௌகரியத்தை உருவாக்குகிறது.

நச்சு புகையால் காற்று மாசு காற்றின் தரத்தை குறைந்து சுவாசிக்க தகுதியற்ற நச்சுச் சூழலை உருவாக்குகிறது.

மேலும் குப்பைகள் நிலத்தில் சேர்வதால் அதிலுள்ள நச்சுகளும் நிலத்தில் படிந்து நாளடைவில் நீரையும் மாசடைய செய்கிறது.

இவையனைத்தும் தினமும் நடைபெறுவதில்லை. ஒரு நாள் கொண்டாடுவதில் என்ன தவறு என சிலர் பேசுகின்றனர்.

ஒரு நாளைய பாதிப்பு எவ்வகையில் சுற்றுச்சூழலை நீண்ட கால அளவில் பாதிக்கின்றன என்பதை ஆய்வுகள் தெரிவிக்கும் போது அதிலும் தீவிர கட்டுப்பாடுகள் தேவை என்பது தெளிவாகிறது.

மெய்யா? பொய்யா?

முடிவு

பட்டாசால் அதிகரிக்கும் மாசு குறித்து கவலை தேவையில்லை எனும் யோகியின் கருத்து எந்தவிதமான அடிப்படை ஆதாரமுமற்றது

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *