மெய்யா? பொய்யா?

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கிருஷ்ணனின் துவாரகை நகரம் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?

மெய்யா? பொய்யா?

பரவும் செய்தி

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகையில் கடலுக்குள் மூழ்கிய நகரம் இருப்பதாக கருத்து நிலவுகிறது. அதை பார்வையிட ஓர் இளைஞர் நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலுக்குள் செல்வது போல காணொளி அண்மைக்காலத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடலுக்கடியில் கட்டமைப்புகள், கற்சிலைகள், சிற்பங்கள் என நகரமே இருப்பதாக அக் காணொளியில் காட்சிகள் அமைந்துள்ளன. அதில் ‘‘இன்று (19.09.2026) புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை. இன்றும் நம் நாட்டில் கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகை நகரைக் கண்டு வியப்படைந்து பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த  பரந்தாமனையும் பார்த்து மகிழ்ந்து சேவிப்போம் வாரீர். ஓம் நமோ நாராயணாய நம!” பின்ெனாட்டுடன் பரப்பி வருகின்றனர்.

காணொளி ஆய்வு

பரப்பப்படும் காணொளியின் உண்மைத் தன்மை குறித்து ‘விடுதலை’யின் ஆய்ந்தறிவோர் குழு விரிவான ஆய்வு செய்தது.

காணொளியைப் பார்க்கும் போதே அது செயற்கை நுண் ணறிவு (AI) கொண்டு உருவாக்கப்பட்டது என அறிய முடிந்தது.

அதனை உறுதிப்படுத்திக் கொள்ள செயற்கை நுண் ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளடங்களைக் கண்டறியும் வலைதளங்களான HiveModeration, TruthScan கொண்டு காணொளி ஆய்வு செய்யப்பட்டது.

மெய்யா? பொய்யா?

முடிவு

ஆய்வின் முடிவில் அந்தக் காணொளி முழுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது தெரிய வருகிறது. ஆய்வு முடிவுக்கான சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளன.

படங்களைக் கொண்டு இணையத்தில் தேடும் (Reverse imaging) முறையில் இந்தக் காணொளியை ஆய்வு செய்த போது  இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘tipu_1300’ என்ற பயனர் கொள்கை நுண்ணறிவுப் பதிவு என்ற குறிப்பானோடுதான் இக்காணொளியைப் பதிவேற்றியுள்ளார். ஆனால் இதைப் பரப்பியவர்கள் ‘உண்மையாக நடந்தது’ என்று பரப்பி வருகின்றனர்.

கடலுக்குள் துவாரகை நகரம் பற்றிய செய்திகளைத் தேடியபோது இதற்கு முன்னும் பலமுறை இது போன்ற காணொளிகளும், ஒளிப்படங்களும் பரவியதும், அது பற்றிய உண்மை சரிபார்ப்புகள் வெளிவந்ததும் கண்டறியப்பட்டது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில், மாதிரி களில் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே,  இது முழுக்க மத நம்பிக்கையைப்பரப்பி மக்களை ஏமாற்றும்உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

காணொளி பரவுவதற்கான
கதையின் பிண்ணனி

வைணவ நம்பிக்கைப் படி  முக்தி தரும் ஏழு புனிதத் தலங்களாகக் கருதப்படும் சப்தபுரிகளில் (அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகை) துவாரகையும் ஒன்றாகும். மகாபாரதக் கதையின்படி கிருஷ்ணன், மதுராவை விட்டு வெளியேறி அரபிக் கடலின் நடுவே விஸ்வ கர்மாவின் உதவியுடன் இந்த ‘அழகிய நகரத்தை’ நிர்மாணித்து ஆட்சி செய்தார் என்று சொல்லப் படுகிறது.

மகாபாரதப் போருக்குப் பிறகு காந்தாரியின் சாபம் காரணமாக, இந்நகரம் கடலுக்குள் மூழ்கியது என்றும் எழுதி வைத்துள்ளனர்.

இதைக் கண்டுபிடிக்க இதுவரைபல முறை ஒன்றிய அரசுகள் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. கடலோரத் தில் மூழ்கியுள்ள சிலஇடங்களைக் கண்டறிந்தாலும்கூட, காலத்தால் அவை பிற்காலத்தவையே! மகாபாரதக் காலம் என்று இவர்கள் கூறும் துவாபர யுகமான 5000 ஆண்டுகளுக்கு முந்தியவை அல்ல. எனவே, பரவும் காணொளிகளில் கூறப்படுவதுபோல துவாரகை நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவது பொய்யே!

– ஆய்ந்தறிவோர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *