மெய்யா? பொய்யா?

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

காந்தியார் வெள்ளைப் பெண்மணியுடன் நடனமாடினாரா?

மெய்யா? பொய்யா?

பரவும் படங்கள்

அக்டோபர் 2 காந்தியார் பிறந்த நாளையொட்டி, காந்தியார் தொடர்பான பல செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்பட்டன. அவற் றுள் காந்தியார், ஓர் ஆங்கிலப் பெண் ணுடன் நடனமாடு வதாக ஒரு படம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பல தளங் களிலும் பகிரப்பட்டது. “காந்தியாரின் அரிய புகைப்படம்” என்ற தலைப்புடன் அனைத்து மொழியினராலும் இப் படம் பகிரப்பட்டிருந்தது.

சில பதிவுகளில், இது வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட படம் என்பதாகக் குறிப்புகள் பரவின. இதே போன்ற படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்துத்துவப் பரப்புரையாளர்களால், திட்டமிட்டு இப் படம் பரப்பப்பட்டு வருகிறது. காந்தியார் குறித்த எதிர் மறையான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் இதனை அவர்கள் பரப்பி வருவதாகப் பலரும் குற்றம் சாட்டியுள்ளதையும் இணையத்தில் காண முடிகிறது.

இதே போல, இரண்டாவது படமாக, மற்றொரு வெள்ளைக்காரப் பெண்மணியுடன் மூக்குடன் மூக்கு வைத்து காந்தியார் உரசிக் கொண்டிருப்பது போன்ற படமும் பரவலாகப் பகிரப்பட்டது.

மெய்யா? பொய்யா?

படம் உண்மையானதா?

இவ் விரண்டு படங்களும் உண்மையா என்பதை அறிய, படங்களைக் கொண்டு தேடும் முறைப்படி (Reverse image search) தேடினோம்.

மெய்யா? பொய்யா?

முதல் படத்தில் இருப்பவர் காந்தியார் அல்ல என்பதும், காந்தியாரின் உடல் அமைப்புடன் பொருந்தாத வலுவான உடல் அமைப்பு கொண்டவராகவும் தெரிந்தது. தொடர்ந்து தேடியதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர், காந்தி வேடமணிந்து நடனமாடுவது போன்ற படத்தை, இந்தியாவில் உண்மையான காந்தி என்பதாகக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரப்பி வருவது தெரிந்தது. இது குறித்து, ஃபேக்ட்லி உள்ளிட்ட பல உண்மை அறியும் தளங்களும் ஆய்வு செய்திருக் கின்றன.

காந்தியார் வேடம் அணிந் திருக்கும் நபரை, காந்தியார் என்றே பரப் புவது தெரிய வருகிறது.

மற்றொரு படம், போட்டோஷாப் மூலம் ஜோடிக்கப் பட்டதாகும். அப் படத்தில் உள்ள காந்தியாரின் படம் உண்மையான புகைப்படம் தான். ஆனால், காந்தியார் நேருவுடன் உரையாடிக் கொண்டிருக்கும் படத்துடன், வேறொரு அயல்நாட்டுப் பெண்மணியுடன் இணைத்து, மூக்குடன் மூக்கு உரசிக் கொண்டிருப்பதாகப் பரப்பி வருகின்றனர்.

எனவே மேற்சொன்ன, இரண்டு படங்களும் உண்மைத் தன்மை கொண்டவை அல்ல; திரிக்கப்பட்டவை ஆகும்.

– ஆய்ந்தறிவோர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *