கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.11.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.09% ஆக உயர்வு! உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 6.09% ஆக அதிகரித்தது; உணவுப் பணவீக்கம் 8.94% ஆக உயர்ந்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை.

* உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க ஒவைசி – ஆசாத் புதிய கூட்டணி! 2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒவைசி – ஆசாத் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதே கூட்டணியின் நோக்கம் என அறிவிப்பு.

* கெஜ்ரிவாலின் மகளுக்கு கொலை மிரட்டல்! முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கொலை செய்வதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. ரூ.7 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், பணம் தராவிட்டால் கெஜ்ரிவாலையும் மகளையும் கொலை செய்வதாகக் கூறப்பட்டதாகவும் புகார்.

* தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோ தாக்களுக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம்! மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றவும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரவும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு திட்டம். மக்களவையின் பலத்தை 543-லிருந்து 850 ஆக உயர்த்தி, 2029 தேர்தலுக்கு முன் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணியில் இணைவது தொடர்பாக சரத் பவாருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு! 86 வயதில் சரத் பவார் பாஜகவுடன் கைகோர்க்க முடிவெடுத்தால், தாம் காங்கிரசில் இணையப் போவதாக ரோகித் பவார் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி இந்து:

* ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் – ஓபிசி அமைப்புகள் அழைப்பு! 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விரிவான, துல்லியமான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் வகையில் ஒன்றிய அரசின் நடைமுறையை மாற்ற வலியுறுத்தி, நவம்பர் 28இல் டில்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.

தி டெலிகிராப்:

* எஸ்.அய்.ஆர்-க்கு எதிரான போராட்டம் நவம்பர் 26 முதல் மீண்டும் தொடக்கம் – டில்லியில் பேரணி! மக்கள் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் இணைந்து, நவம்பர் 26 முதல் டிசம்பர் 20 வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தணிக்கைகள் மூலம் எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு எதிராக போராட உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 77ஆவது ஆண்டு நாளான நவம்பர் 26 அன்று மண்டிர் மார்க்கில் இருந்து பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* லடாக் மலைப்பகுதி கவுன்சில் தேர்தலுக்கு எதிர்ப்பு – சோனம் வாங்சுக் வீட்டுக்காவலில்! கடும் குளிர்காலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி லடாக் மலைப்பகுதி கவுன்சில் தேர்தலை நடத்தும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *