சென்னை, நவ. 13– கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாசக் குறுஞ் செய்தி அனுப்பியும், குடிபோதையில் ஆட்சியர் வீட்டிற்குள் சென்று தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்படும் த.வெ.க. சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து, சென்னை பனகல் மாளிகை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “யாரிடம் சென்று ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புவது? இப்படி நடந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினரை, பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் கைது செய்து, சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; அவரை பதவி விலக செய்ய வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்டமன்றத்தில் ‘பெண்களை யார் இழிவுபடுத்தினாலும் நான் விடமாட்டேன்’ என்று சொன்ன வார்த்தை உண்மையாக இருந்தி ருக்கும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. இரண்டு மாத காலமாக அவரை உள்ளே வைத்துப் பாதுகாத்து வந்திருக்கிறீர்கள்; இது எவ்வளவு அருவருப்பானது?
த.வெ.க. தமிழ்நாட்டை குறைத்து பார்க்கிறதா?
ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து வந்திருப்பார்! இப்படிச் சமூக வலை தளங்களிலும், தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் நிமிடத்திற்கு நிமிடம் அவருடைய பெயர் ஒவ்வொருவர் பேச்சிலும் அடிபடும்போது அந்தப் பெண்ணின் மனநிலை என்னவாகும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வேறு போட்டுள்ளீர்கள். காவல் அதிகாரிகளைக் கொண்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று சொன்னால், வேறு என்னென்ன நிகழ்வுகள் அங்கு நடந்தன? எதற்காக நீங்கள் மூடி மறைக்கிறீர்கள்?
முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பி னர்களைச் சந்தித்திருக்கிறார். இது குறித்து அவர் ஏதாவது விவரங்கள் கேட்டு வெளிப்படுத்தினாரா என்றால் இல்லை. அப்படியென்றால் இதைக் கண்டுகொள்ளாமல் போய்விடலாமா? த.வெ.க. அரசு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது? தமிழ்நாட்டை நீங்கள் குறைத்துப் பார்க்கிறீர்களா? உங்களுக்கு ஒரு பெரிய இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டீர்களா? இது மறைக்கக்கூடிய ஒரு செயலா? அந்தப் பெண்ணிடம், மாவட்ட ஆட்சியரிடம் நியாயமாகத் தமிழ்நாடு அரசு மன்னிப்பு கேட்க வேண்டுமா, இல்லையா? இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துள்ளீர்கள்.
இதுபோன்று நடக்கவே இல்லை என்று சில அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஓர் அமைச்சர், ‘மாவட்ட ஆட்சியர் வந்து புகார் கொடுக்கட்டும்’ என்கிறார். ஆனால், அந்தப் பெண் ‘மாவட்ட ஆட்சியரின் கணவரும் ஆட்சியர்தான்; அவர் புகார் அளித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தள்ளி விடுவதற்கும், கடத்துவதற்குமான முயற்சியைத் த.வெ.க. அரசு செய்வது ஆபத்தானது. தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தை களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுட்டிக்காட்டு கிறது. இந்த விவகாரத்தில் த.வெ.க. அரசை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
