இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ரகபூமிங் ரகா பதவி விலகினார்

- Advertisement -

இந்தோனேசியா, நவ. 13- பள்ளிச் சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய இந்தோனேசியாவின் துணை அதிபர் ஜிப்ரான் ரகபூமிங் ரகா தனது பதவியிலிருந்து விலகுவ தாக அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோ வின் மூத்த மகனான ஜிப்ரான் ரகபூமிங் ரகா (வயது 39), கடந்த 2024ஆம் ஆண்டு துணை அதிபருக் கான தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்தோனேசிய சட்டப்படி, துணை அதிபர் தேர்தலுக்குப் போட்டி யிடுபவர் குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வேண்டும் என்ற நிலையில், வெளிநாட்டில் படித்த அதற்கு இணையான சான்றிதழ்களை ஜிப்ரான் தனது வேட்புமனுவில் தாக்கல் செய்திருந்தார்.

ஜிப்ரான் தாக்கல் செய்த ஆவணங்கள் விவாதத்துக்குள்ளான நிலையில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

வெளிநாட்டில் பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்ததே மேல் நிலைப் பள்ளி கல்வியை முடித்ததற்கான சான்று என்று ஜிப்ரான் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், “ஜிப்ரான் பள்ளிக் கல்வியை முடித் ததற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப் பைத் தொடர்ந்து, ஜிப்ரானை பதவி நீக்கம் செய்வதற்கான தீர் மானத்தை கொண்டு வரும் முயற்சிகளை நாடாளு மன்ற உறுப்பினர்கள் தொடங்கினர்.

அந்நாட்டின் 120-க்கும் மேற்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத் தின் முன்மொழிவை நேற்று (12.11.2026) நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யவிருந்தனர். இந்த நிலையில், இந்தோனேசிய நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த ஜிப்ரான், மக்கள் கலந்தாய்வு பேரவையின் தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.

இதற்கு முன்னதாக, அவர் கடந்த 2021 முதல் 2024 வரை சுரகார்த்தா நகர மேயராக ஜிப்ரான் பணியாற்றியது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *