வாசிங்டன், நவ. 10- அமெரிக் காவில் கோல்ப் மைதானம் அமைப்பதற்காக சுமார் 400 மரங்களை வெட்டியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாசிங் டன் மாகாணத்தில் ஈஸ்ட் பொட்டோமாக் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை பன்னாட்டு அளவிலான கோல்ப் விளையாட்டு மைதானமாக மாற்று வதற்காக டிரம்ப் திட்டமிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து பூங்காவில் உள்ள சுமார் 400 மரங்களை டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் வெட்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் வரும் நவம்பர் 15 அன்று, பொட்டோமாக் பூங்காவை மூடுவதற்கு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து வாசிங்டன் டி.சி பாதுகாப்பு லீக் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர்.
இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை அமெரிக்க நீதித்துறை முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரிப்பதற்காக வழக்குரைஞர் ஜெஸ்ஸி லியூவை நியமனம் செய்து தலைமை நீதிபதி அனா ரெயஸ் 7.11.2026 அன்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பொட் டோமாக் பூங்காவில் கூடுதல் மரங்களை அகற்றுவதற்கோ அல்லது சேதப்படுத்துவதற்கோ தற்காலிகமாக தடை விதிப்பதாக நீதிபதி ரெயஸ் தீர்ப்பளித்தார்.
மேலும் வழக்கு விசாரணை தொடரும் வரை, கோல்ஃப் மைதானத்தில் எந்தவிதமான மாற்றங்களை மேற்கொள்வதற்கு 10 நாட்கள் முன்பு, பூங்கா நிர்வாகம் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அமெரிக்க நீதிபதி ரெயஸின் தலையீட்டை உள்துறை அமைச்சகம் விமர் சனம் செய்துள்ளது.
நீதிபதி ரெயெஸின் செயல் பாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், வாசிங்டனின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான டிரம்பின் முயற்சியை நீதிபதி தடுப்பதாகவும் அமெரிக்க உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
