சீன உளவாளிப் பெண்ணுடன் தொடர்பா? என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் பதவி விலகல்!

- Advertisement -

ஹாங்காங்,  நவ.13- சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ணுடனான தொடர்பால் தேசிய பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந் ததைத் தொடர்ந்து, உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலை மைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் நேற்று (12.11.2026) பதவி விலகனார்.

சிங்கப்பூரைத் தலை மையிடமாகக் கொண்ட மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் ஜென்சன் ஹுவாங்கிற்கு ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியானது.

அமெரிக்க உளவுத் துறையினர் ஆலிஸ் ஹுவாங்கைச் சீன உளவாளி எனச் சந்தேகிப்பதால், இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ரகசியங் களுக்குப் பெரிய அச்சுறுத் தலாகப் பார்க்கப்பட்டது. ஆலிஸ் ஹுவாங்குடனான உறவை ஜென்சன் ஒப்புக் கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலை வர் கிம்பர்லி பவல் என் பவருடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி நெருக்கடியை மேலும் அதிகரித்தன.

இந்நிலையில், அவர் பதவி விலகியுள்ளதை அடுத்து, நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நிதி அதிகாரி கோலெட் கிரெஸ்சும், முதல்முறை யாக இயக்குநர் குழுவின் தலைவராக ஹார்வி சி. ஜோன்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக என்விடியா பங்குகள் 13% சரிந்துள்ளன.

இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குவதாக மெகாஸ்பீட் நிறுவனம் நேற்று தெரிவித்து ள்ளது. அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *