சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 82 பேர் உயிரிழந்த சோகம்

1 Min Read

ஷான்சி, மே 24- சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி சுரங்கத்தில் 22.5.2026 அன்று இரவு 7.29 மணியளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், முழுமையான மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தர விட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணியிட பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பெரிய விபத்துகளைத் தடுக்க ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், சீன துணைப் பிரதமர் ஜாங் குவோசிங் தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *