ஈரானில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு

தெஹ்ரான், மே 8- ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத் துக்கு உட்பட்ட அந்திஷே நகரில் ‘அர்காவன்’ என்ற பல அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த வளாகத்தில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது திடீரென ஒரு பகுதியில் தீப்பிடித்தது. கடைகளுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். சிறிது நேரத்தில் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் கரும்புகை சூழ்ந்தது. இந்த புகையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 41 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் ஈரான் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தற்போது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 3 வாரங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனவே, இந்த தீ விபத்துக்கும், போர் பதற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *