நியூயார்க், நவ. 8- போர்கள், மோதல்கள் மற்றும் வன்முறை போன்றவை காரணமாக கட்டாய சூழல் காரணமாக இடம் பெயர்ந்தவர்களில் சுமார் 90 மில்லியன் (9 கோடி) மக்கள் பருவ நிலை மாற்றத்தின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்துக ளுக்காளாகியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 9 கோடி புலம் பெயர் மக்கள் வறட்சி, வெள்ளம் மற்றும் கடும் வெப்பம் போன்ற காலநிலை அபாயங்களால் அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடிய நாடுகளில் வாழ்ந்து வருவதாக அய்க்கிய நாடு கள் அகதிகள் முகமை (UNHCR) கூறி உள்ளது. பாதிக்கப்பட கூடிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கவும் UNHCR வலியுறுத்தியுள்ளது.
மோதல்கள், இடப் பெயர்வு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் அகதிகளாக தஞ்ச மடைந்தவர்களில் 75% பேர் ஆப்கானிஸ்தான், பங்காளதேசம் போன்ற கடுமையான பருவநிலை பாதிப்புகளை எதிர்கொள் ளும் நாடுகளில் வாழ் கின்றனர் எனவும் கூறப் பட்டுள்ளது.
தவிர காலநிலை மாற்றம், இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை மேலும் கடினமாக்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான அகதிகள், காலநிலை அபாயங்களால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட தங்களின் நாடு களுக்கு மீண்டும் திரும் பினர். ஆனால் அந்த முடிவு அவர்களை மீண்டும் இடம்பெயரும் அபாயத்தில் ஆழ்த்தி வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் 90 மில்லியன் மக்கள் புலம்பெயரும் ஆபத்து அய்.நா. அவை எச்சரிக்கை
Leave a Comment
