தேர்வில் தோல்வி அடைந்தால் இனி கல்வி உதவித்தொகை கிடையாதாம்! கல்விக் கண்ணைக் குருடாக்கும் ஒன்றிய பிஜேபி அரசு

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.11- தேர்வில் தோல்வி யடைந்தால் இனி கல்வி உதவித்தொகை கிடையாது என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

அறிவியல் பாடங் களில் உயர்கல்வி படிக் கும் மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘இன்ஸ்பயர்-எஸ்.எச்.இ.’ கல்வி உதவித் தொ கையை வழங்கி வருகிறது.

பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று, அறிவியல் மற்றும் இயற்கை அறிவியல் சார்ந்த இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், ஆராய்ச்சி வழிகாட்டலுக் காக ஆண்டுக்கு ரூ.20 ஆயி ரமும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘இன்ஸ்பயர்- எஸ்.எச்.இ.’ உதவித்தொகை வழங்கும் முறையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை புதிய மாற்றங் களைக் கொண்டு வந்துள் ளது. புதிய விதி முறையின் படி, ஒரு மாணவர் கல்வி யாண்டில் ஒரு பாடத்தில் தோல் வியடைந்தாலோ அல்லது தேர்வுக்கு வரா மல் இருந்தாலோ, அந்த ஆண்டுக்கான உதவித் தொ கையை இழக்க நேரிடும்.

அடுத்த ஆண்டில் தேவையான கல்வித் தகுதியை பெற்றால் மீண்டும் உதவித் தொகை யைப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், புதிய வழிகாட்டுதலின்படி முதல் ஆண்டில் 60 சத வீத்துக்கும் குறைவான மதிப்பெண் அல்லது 7 சி.ஜி.பி.ஏ.வுக்குக்கும் (மதிப் பெண்களின் அடிப் படையில் கணக்கிடப்படும் ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரி) குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற முடியாத நிலை ஏற்படும். மேலும், ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் உதவித் தொகை நிறுத்தப் படும். இதனால் அடுத் தடுத்த ஆண்டுகளிலும் கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி வழி காட்டல் தொகையை இழக்க நேரிடும்.

இதுவரை ஆண்டுதோ றும் வழங்கப்பட்டு வந்த ரூ.20 ஆயிரம் ஆராய்ச்சி வழிகாட்டல் தொகையும் மாற்றப்பட்டுள்ளது. இனி இந்தத் தொகை 3-ஆம் மற்றும் 4-ஆம் ஆண்டுகளில் மட்டுமே வழங்கப்படும். இதனால் 5 ஆண்டுகளில் மாணவர் பெறக் கூடிய அதிகபட்ச உதவித் தொகை ரூ.4 லட் சத்தில் இருந்து ரூ.3.4 லட் சமாக குறைகிறது.

இதுவரை ஒவ்வொரு பள்ளி வாரியத்துக்கும் விண்ணப்பங்களின் எண் ணிக்கையின் அடிப்படை யில் உதவித்தொகைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த நடைமுறையும் மாற் றப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு பள்ளி வாரியத் திலும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உதவித் தொகைக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இதனால் சில மாநிலங்களில் இந்த உதவித்தொகையைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித் துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *