திருப்பூர் ஊத்துக்குளியில் ரூ.27.31 லட்சத்தில் தொல்லியல் ஆய்வு டி.ஆர். பாலு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் மக்களவையில் தகவல்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 21 இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் சென்ற அய்ந்து ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. மக்களவைக் குழுத்தலைவரும் பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி. வினா ஒன்றினை எழுப்பி இருந்தார். மாநில வாரியாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வரும் ஊர்கள், ஒவ்வொரு திட்டத்தின் மீதான செலவு, பணி நிறைவுக்கான கால இலக்கு, அகழ்வாய்வுகள் மீது மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ரீதியான நிரூபணங்கள் போன்ற பல்வேறு தகவல்களை இந்த கேள்வியின் வாயிலாக  டி.ஆர்.பாலு அவர்கள் கேட்டிருந்தார்.

ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில்

இந்தக் கேள்விக்கு ஒன்றிய பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறைக்கான அமைச்சர்  கஜேந்திர சிங் ஷெகாவத்  நேற்று (20.7.2026) மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அதன்படி, ‘‘குஜராத், அரியானா, மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், கருநாடகம், தமிழ் நாடு, பிகார், ஒரிசா, தெலங்கானா ஆகிய 9 மாநிலங்களில் மொத்தம் 16 ஊர்களில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் அகழ்வுப் பணிகள் மொத்தம் ரூ.8.95 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.

ஊத்துக்குளி, குமரிக்கல்
பகுதியில் அகழ்வு

தமிழ் நாட்டில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குமரிக்கல் என்ற ஊரில் செயல் படுத்த பட்டு வரும் அகழ்வாய்வுப் பணிகளுக்கு இதுவரை 27,30,782 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள தொன்மைக்காலக் குடியிருப்பு பகுதி பற்றிய ஆய்வு இங்கு நடைபெறும் ஆய்வு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், அதாவது 2021 முதல் 2025 வரை, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தம் 121 இடங்களில் ஒன்றிய தொல்லியல் துறை அகழ்வாய்வப் பணிகளை மேற்கொண்டது. இந்த அகழ்வுகளின் போது கட்டடங்களின் எச்சங்கள், இறந்தோர் புதையிடங்கள், மட்கலங்கள், நாணயங்கள், பாசிமணிகள் உள்ளிட்ட நகைகள் அணிகலன்கள், வேளாண் கருவிகள், எலும்பு பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டன. நிறுவப்பட்டுள்ள செயல்முறைகளின் படி இவற்றின் மாதிரிகள் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அறிவியல் நிரூபண சோதனைகளுக்க்காக அனுப்பப் பட்டன.

அகழ்வுப் பணிகள் தொடர்பாக நீதிமன்றங்களால் எந்த ஆணையும் பிறப்பிக்கபடவில்லை’’

இவ்வாறு தனது பதிலில் அமைச்சர் ஷெகாவத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *