காவல்துறை அதிகாரி உள்பட ஒரே நாளில் 15 கொலைகள்!
பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ‘சைலண்ட் மோடில்’ இருக்கிறார்!
அமைச்சரோ கொலைகள் நடப்பது ‘சகஜம்’ என்கிறார்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அறிக்கை
- காவல்துறை அதிகாரி உள்பட ஒரே நாளில் 15 கொலைகள்!
- பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ‘சைலண்ட் மோடில்’ இருக்கிறார்!
- அமைச்சரோ கொலைகள் நடப்பது ‘சகஜம்’ என்கிறார்!
- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- ஒரே நாளில் 15 கொலைகளா?
- காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை!
- காவல்துறையினராலும் பாதுகாப்பில்லை!
- சட்டப்பேரவை துணைத் தலைவரின் அநாகரிகச் செயல்!
- சீரழிந்து கிடக்கும் இளைய தலைமுறை
- பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சரின் அமைதி!
- அமைச்சரின் பொறுப்பற்ற பதில்
- மக்களை வாட்டும் அரசு
- ஏமாற்றியே காலந்தள்ள முடியாது!
காவல்துறை அதிகாரி உள்பட ஒரே நாளில் 15 கொலைகள்! பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ‘சைலண்ட் மோடில்’ இருக்கிறார்! அமைச்சரோ கொலைகள் நடப்பது ‘சகஜம்’ என்கிறார்! தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துகிடக்கிறது! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சொல்லும் தரத்தி லில்லை. கொலைச் செய்திகள் அன்றாடம் வருவதும், தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதும் அன்றாடச் செய்திகளின் ஒரு பகுதியாகிவிட்டது. வெளியில் செல்லும் மக்கள் வீடு திரும்பினால் தான் வாழ்க்கை உறுதி என்னும் கொடுஞ் சூழலுக்குள் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
ஒரே நாளில் 15 கொலைகளா?
கடந்த இரு நாட்களுக்கு முன்னால் தீபாவளி அன்று மட்டும் 15 கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெற்றி ருக்கின்றன.
தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் செந்தில்குமார் (57); திருச்சி மாவட்டம், இனாம் சமய புரத்தில் விஷால் (17), ராகுல் (17), புறத்தாக்குடியில் கிறிஸ்டோபர் (20); பெரம்பலூர் மாவட்டம், நொச்சியத்தில் ரவி (50); கடலூர் மாவட்டம், பெரியகாட்டுப்பாளையத்தில் பிருத்விராஜன் (26); கள்ளக்குறிச்சி மாவட்டம், நின்னையூரில் பாலசுப்பிரமணியன் (70); சென்னை மாவட்டம், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தனுஷ் (19), திருவொற்றியூரில் பவித்திரன் (32); காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேடு நேதாஜி நகரில் பார்த்திபன் (32); சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்குத் தெருவில் தங்கச்சாமி என்ற நவீன் (26), மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானில் விக்னேஷ் (24); திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பாண்டியன் நகரில் சுவேதா (26); விருதுநகர் மாவட்டம், வடக்குப்பட்டியில் அன்புச்செல்வம் (25); திருவள்ளூர் மாவட்டம், சென்றான்பாளையம் அருகே மேகலா (24) உள்பட 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாது காப்பில்லை என்னும் நிலை அசாதாரணமானது. தேனியில் கொல்லப்பட்ட செந்தில்குமார், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். நடுச் சாலையில் பட்டாசு வெடித்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த போதையாளர்களைத் தடுக்கச் சென்றபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை!
இதேபோல, தாழையூத்து காவல்நிலையத்துக் குட்பட்ட பகுதியில் தகராறு செய்த இளைஞர்களைத் தடுத்த காவலர்கள் மீது தாக்குதல்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் ஆகிய மூவர் மீது தாக்குதல்,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் நள்ளிரவில் மது அருந்தி கலாட்டாவில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்ட தளவாய் காவல்நிலையக் காவலர், ஊர்க்காவல் படை வீரர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் – இதில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு.
மக்கள் பாதுகாப்புக்காக உழைக்கும் காவல்துறை யினரின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்னும் செய்தி, வன்முறையில், அட்டூழியங்களில் ஈடுபடுவோருக்கு இன்னும் தைரியம் அளிக்காதா?
இதன் விளைவு என்னவாகும்?
காவல்துறையினருக்கு ‘நமக்கேன் வம்பு – நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்’ என்ற எண்ணம் வந்தால், அதன் விளைவு? கடமை உணர்ச்சியே பட்டுப் போகுமே!
காவல்துறையினராலும் பாதுகாப்பில்லை!
இது ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், காவல்துறையினரால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிகழ்வுகளின் பட்டியலும் செய்திகளில் வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருக்கா ணாப்பட்டியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு எதிராக ராஜ்குமார் என்ற இளைஞர் மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியதால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அந்த இளைஞரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர், அதற்குக் காவல்துறை உடந்தையாக இருந்தது சிசிடிவி காணொலி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை துணைத் தலைவரின் அநாகரிகச் செயல்!
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கரைச் சந்தித்து, தனது பகுதி அடிப்படை வசதிகள் குறித்துப் புகாரளிக்கச் சென்றவரைத் சட்டப்பேரவை துணைத் தலைவரே தாக்கிய காணொலி வெளிவந்ததும், தாக்கப்பட்டவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதாக ஒரு காணொலி வெளியிடப்பட்டது. ஆனால், அது காவலர்களும் சட்டப்பேரவை துணைத் தலைவரும் தன்னை மிரட்டி எடுத்த காணொலி என்று அடுத்து அவர் வெளிப்படுத்திவிட்டார்.
வெட்கமாக இல்லையா?
சென்னையில் புயலில் சிக்கி மீனவர்கள் இறப்பதற்குக் காரணம் யார் என்று கேள்வி எழுப்பியவரைக் காவல் அலுவலர் மிரட்டும் காணொலி வெளிவருகிறது.
சீரழிந்து கிடக்கும் இளைய தலைமுறை
கேட்கும் செய்திகளில், கொடுமையினும் கொடுமையாகக் கொலை செய்யப்பட்டோர், கொலை செய்தோர், வன்முறையில் ஈடுபட்டோரில் பெரும்பாலோர் 18 வயது கூட நிரம்பாதவர்கள். அதிகபட்சம் 20 – 25 வயதினர். மதுவும், கஞ்சா – மருந்து போதைகளும், திரைப்படங்கள் தரும் மிதமிஞ்சிய வன்முறை போதையும், கட்டுப்படுத்த ஆளில்லை என்னும் போக்கில் அவர்களை நினைக்க வைத்திருக்கும் அரசும் தானே இதற்குக் காரணம்? இளைய சமுதாயம் இப்படிச் சீரழிந்து போயிருப்பதைக் கண்டு நம் நெஞ்சம் குமுறுகிறது.
பொறுப்பேற்க வேண்டிய
முதலமைச்சரின் அமைதி!
முதலமைச்சரின் அமைதி!
இத்தகைய கொடுமைகள், சட்டம் – ஒழுங்குச் சீர்கேடுகளைத் தடுக்க வேண்டிய பொறுப்புமிக்க அத் துறையின் அமைச்சரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், கண்டும் காணாமல் இருப்பது நியாயமா? பொறுப்பேற்க வேண்டியவர் வாய்திறக்காமல் இருப்பது பொறுப்பற்ற செயல் அல்லவா?
எதற்கெடுத்தாலும் தி.மு.க. மீது பழி போட்டு, திசை திருப்புகின்ற பணிகள் சில ஊடகங்களின் உதவியோடு நடத்தப்படுகிறது.
ஆட்சி என்பது காட்சி அல்ல என்பதைத் திரும்பத் திரும்ப முதலமைச்சருக்கு நினைவூட்ட வேண்டி யிருக்கிறது. பொது மக்கள் உயிரச்சத்தில் இருக்கிறார்கள்.
அமைச்சரின் பொறுப்பற்ற பதில்
ஊடகங்களுக்குப் பதில் அளிக்கும் அமைச்சர் ஒருவர், ஏதோ தீபாவளி என்றால் பட்டாசு வெடிப்பது இயல்புதான் என்பதைப் போல “தீபாவளி என்றால் சில கொலைகள் நடப்பது வழமைதான்!” என்று அளிக்கும் பதில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.
பொறுப்பற்ற, ஆளுமையற்றவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டு படாத பாடு படுகிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த நிலைமை என்ன? இப்போதிருக்கும் நிலைமை என்ன? திடீரென மக்கள் இப்படி மாறிவிட்டார்களா? காவல்துறையும், பாதுகாப்பும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் சட்டம் – ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருந்தது.
மக்களை வாட்டும் அரசு
விலைவாசி உயர்வு ஒரு பக்கம் மக்களை வாட்டுகிறது; கொலைவாசி உயர்வு ஒரு பக்கம் மிரட்டுகிறது. ஆட்சி நடத்துவது என்றால் என்னவென்று அறியாதவர்களின் அறியாமை காரணமாகத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் பறிபோகின்றன.
இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல், தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளில் இறங்காமல், வேறு வேறு பிரச்சினைகளுக்கு மடைமாற்றிக் கொண்டும், ஊடகங்களுக்குச் செய்தி கொடுத்துக் கொண்டுமே காலத்தை ஓட்டிவிடலாம் என்று கருதுகிறார்களா த.வெ.க. அரசும் அதனை ஆட்டுவிப்போரும்? வாக்களித்த மக்களை என்னவென்று கருதுகிறார்கள்?
பிரபலம், மாய்மாலப் பேச்சுகள், தங்களை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாகவே காட்டி ‘விக்டிம் கார்டு’ (Victim Card) நாடகமாடும் போக்கு இவற்றால், தமிழ்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் ஏமாந்து போனதன் விளைவை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
ஏமாற்றியே காலந்தள்ள முடியாது!
திரைப்படங்களிலும், செல்பேசி ஊடகங்களிலும் மூழ்கடித்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று இனியும் கருதாதீர்கள். மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருந்த தமிழ்நாட்டை, இப்படிப் பார்க்க ஒரு போதும் மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாடு அரசு இதனை ஓர் எச்சரிக்கைக் காலமாக எடுத்துக் கொண்டு உடனடியாகச் செயலில் இறங்கவேண்டும்.
தாழ்ந்த தமிழ்நாடு, வீழ்ந்த தமிழ்நாடு ஆகிவிடக் கூடாது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.11.2026
