சுவிட்சர்லாந்தில் சிவன் சிலையா? நேரில் கண்டவரின் சாட்சியம்

3 Min Read
- Advertisement -

ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் இருக்கும் உலகின் தலைசிறந்த அணுத்துகள் ஆய்வு மய்ய ஆய்வுக்கும், அங்கு நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலைக்கும் முடிச்சுப் போட்டு இதற்கும் அணுத்துகள் ஆய்வுக்கும் ஏகப்பட்ட தொடர்பு இருப்பதாக திருக் குடந்தை வெங்கடேஷ் என்பவர்,  “என்னென்ன கம்பிகட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க” என்பது மாதிரி அளந்து விட்டிருந்ததற்கு 2.11.2026 அன்று ‘விடுதலை’யில் வந்த பதிலை ‘மெய்யா? பொய்யா?’ பகுதியில் படித்தேன்.

நான் அணுத்துகள் மற்றும் கருந்துளை பற்றிய ஆய்வாளன் என்ற முறையிலும், இரண்டு முறை அங்கு சென்று அந்த அறிவியலாளர்களுடன் (விஞ்ஞானிகளுடன்) விவாதித்து விட்டு வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த நடராஜர் சிலை செர்ன் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிடம் கேட்டுப் பெற்றதல்ல.

அந்தச் சிலை இந்து மதக் கருத்துகளைப் பிரதிபலிப்பதாக அந்த சிலை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் தெளிவாக்குகின்றன. இந்த செர்ன் என்ற ஆய்வகத்தின் நோக்கம் என்னவென்றால் பிரபஞ்சப் பெரு வெடிப்பு ஏற்பட்டபோது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள இன்னொரு பிரபஞ்ச வெடிப்பைச் சின்னஞ் சிறு அளவில் செயற்கையாக உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றால் ‘Protons’ அதாவது அணுத்துகள்களை (அணுக்களை அல்ல) ஒளியின் வேகத்தில் அதாவது ஒரு விநாடியில் மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் மோதவிட்டு அவை சிதறும்போது அதி லிருந்து என்னென்ன வேறு துகள்கள் வருகின்றன என்று ஆராய்வதுதான்.

அப்போதுதான் இந்தப் பிரபஞ்சம் அடிப்படையில் எப்படி உருவாகியது என்பது தெரியும். அந்த நடராஜர் சிலை வெறும் வெங்கலத்தால் ஆன உலோகம்தான்.

வெங்கலத்திற்கு என்னென்ன தன்மைகள் இருக் குமோ, அவைதான் அந்தச் சிலைக்கும் உண்டு.

காஸ்மாலஜி (Cosmology) என்ற பிரபஞ்சவியல் மனிதக் கற்பனையின் எல்லைகளையும் தாண்டி இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஏராளமான உண்மைகள் உடையது. மனிதன் கண்டுபிடித்த உண்மைகள் வெறும் அய்ந்து விழுக்காடுதான்; மீதி தொன்ணூற்றி அய்ந்து விழுக்காடு உண்மைகள் இருள் ஆற்றல் மற்றும் இருள் பொருள் (Dark Energy, Dark Matter) பற்றி இன்னும் நாம் அறிய வேண்டிய உண்மைகள் ஏராளமாக உள்ளன. அதைப்பற்றி இந்த உலோகச் சிலையுடன் ஒப்பிட்டால் அது எவ்வளவு கேலிக்கு உரியது? இயற்பியல் பற்றி இவருக்கு துளிகூடத் தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்துமதக் கருத்துகள் எல்லாம் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டவை. எந்தப் பரிசோதனைக் கும்  உட்படாதவை; மனம் போன போக்கில் சொல்லப்படு பவை. ஆகவே ஆன்மிகவாதிகள் எப்போதும் அறிவி யலைத் தங்களுக்குத் துணையாக அழைப்பார்கள். “பார்த்தீர்களா அறிவியலே எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறது  ஆகவே அது உண்மை” என்பார்கள்.

ஆனால் அறிவியல் எப்போதுமே “பார்த்தீர்களா ஆன்மிகமே எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறது. ஆகவே இது உண்மை” என்று சொன்னதே இல்லை. போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள், ‘ஒரு வெண்கலச்சிலை பிரபஞ்சத்தையே விளக்குகிறது என்று. ஆனால் அந்த செர்னில் என்ன நடக்கிறது தெரியுமா? அணுத்துகள்களான புரோட்டான்கள் ஒரு வினாடியில் நான்கு கோடித் தடவைகள் மோது வதையோ, ஒரு விநாடியை நூறு கோடியாகப் பிரித்து அதிலொரு பங்கு நேரத்தில் மோதலில் என்ன நடக்கிறது என்பதைக் கலோரிமீட்டர்கள் என்ற கருவிகள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதையோ இவர்கள் அறிவார்களா?

இன்னும் எவ்வளவோ கற்பனைகூடச் செய்ய முடியாதவை  அங்கு நிஜத்தில் நடக்கின்றன. அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் இந்து மதத்தை வலுப்படுத்த என்று ஏதேதோ உளறிக் கொட்டுகிறார்கள்.

– என். சித்து முருகானந்தம், அறிவியலாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *