பிரமாண்ட புதிய 2 கோள்கள் நாசா கண்டுபிடிப்பு!

2 Min Read

வாசிங்டன் ஜூன் 26- வியாழனை போல பிரமாண்டமான 2 புதிய கோள்களை நாசா கண்டறிந்துள்ளது.

TOI 791 b & TOI 791 c என பெயரிடப்பட்டுள்ள இவை, பஞ்சு மிட்டாயை விட குறைவான அடர்த்தியையே கொண்டுள்ளதாம். பூமியில் இருந்து 1,100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இவை ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் நிரம்பியுள்ளன. வியாழனை விட சுமார் 35% குறைவான எடையை இந்த 2 கோள்களும் கொண்டிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.

தொழில்துறையினரே சொந்தமாக சரக்கு ரயில் பெட்டிகளை வடிவமைக்கலாம் ரயில்வே அமைச்சகத்தின் புதிய கொள்கை!

புதுடில்லி, ஜூன் 26- இந்தியாவில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும், தொழில்துறையினரின் தேவையை எளிதாக்கும் வகையிலும் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் புதிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

சொந்தமாக…

இதன்படி, சிமெண்ட், இரும்பு போன்ற பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்தவர்களும், தங்களின் உற்பத்திப் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப, தங்களுக்குத் தேவையான பிரத்யேக சரக்கு ரயில் பெட்டிகளை (Wagons) சொந்தமாகவே வடிவமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது.

பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தன்மைக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் உருவாக்கப்படுவதால், சரக்குகளை ரயில்களில் ஏற்றுவதும், அங்குமிங்கும் இறக்குவதும் முன்பை விட மிகவும் எளிதாகும்.

இந்தத் திட்டம் தொழில்துறையினருக்குப் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும் என்பதால், ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து மற்றும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 நாட்களில் புதிய கொள்கை:

இந்தத் திட்டத்திற்கான புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை அடுத்த 15 நாட்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

கடவுளை நம்பிச் சென்றவர்கள்

தங்கச் சங்கிலியைப் பறி
கொடுத்ததுதான் மிச்சம்!

பெரம்பலூர், ஜூன் 26- பெரம்பலூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த 2 பெண் பக்தர்களிடம் 8 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் நேற்று (24.06.2026) கம்ப பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் எளம்பலூர், பெரம்பலூர், வடக்குமாதவி, கோனேரிப்பாளையம், தண்ணீர்பந்தல், உள்ளிட்ட அண்மையில் உள்ள  கிராமங்களில் இருந்து  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எம் ஜி ஆர் நகரை சேர்ந்த முத்துசாமி மனைவி செல்வி (55), எளம்பலூரை சேர்ந்த சுசீலா என்ற இரு பெண் பக்தர்களிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை அவர்கள் கூட்டத்தில் நைசாக பறித்து எடுத்து சென்றனர். கூட்டத்தில் இருந்து வெளியே பெண்கள் தங்கச் சங்கிலியை களவாடப்பட்டதை அறிந்து கத்திச் கூச்சலிட்டு அழுதனர்.

அப்போது அங்கிருந்த பெண் காவல்துறையினர் அவர்களுக்கு ஆறுதல்  கூறினார்கள். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் நகர  காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடவுள் தரிசனம் செய்து வந்தவர்களிடமே தங்க நகை களவாடப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *