7 மாநிலங்களில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப். 6- நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் வெளியேற்றத்தைத் தவிர்க்கவும், விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

7 மாநிலங்களுக்கு உத்தரவு:

தமிழ்நாடு, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்கள் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்களது பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பணியில் சேர வாய்ப்பு

மார்ச் 31, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதிகள், வேறு எந்தப் பணியிலும் சேராமல் இருந்தால், அவர்கள் மீண்டும் நீதிபதி பணியில் சேருவதற்கான வாய்ப்பை இந்த 7 மாநிலங்களும் வழங்க வேண்டும்.

தற்காலிக ஏற்பாடு:

பணி விதிகள் திருத்தப்படும் வரை, 60 வயதை எட்டிய நீதிபதிகளை ஓய்வு பெறச் செய்யக் கூடாது. சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தகுதி மதிப்பீட்டிற்கு உட்பட்டு, அவர்கள் 62 வயது வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்.

இதர மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்:

ஆந்திரப் பிரதேசம், பீகார், டில்லி, குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *