பட்டாசு வெடித்தால் நோய் குணமாகும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு பரவிய நிலையில் மன்னிப்பு..!

- Advertisement -

கொல்கத்தா, நவ.10 மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடித்தால் பல்வேறு நோய்கள் குணமாகும் என்று கூறிய பாஜகவின் பெண் சட்டமன்ற உறுப்பினர் பாபியா அதிகாரி, தனது கருத்துக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் டோலிகஞ்ச் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான பாபியா அதிகாரி, கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தனது தொகுதியில் நடை பெற்ற காளி பூஜை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

காளி பூஜையின்போது பட்டாசு வெடிப்பு

அப்போது பேசிய அவர், “நம்முடைய முதலமைச்சர் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று கூறியுள்ளார். பட்டாசுகள் இல்லாமல் காளி பூஜை எப்படி முழுமை யடையும்? நாங்கள் நிச்சயமாக பட்டாசுகளை வெடிப்போம். அதே சமயம், காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம். பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் பல நோய்கள் குணமாகும் என்பதைக் காண்பீர்கள்” என்றார்.

பாபியா அதிகாரியின் இந்த கருத்து வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலில் இத்தகைய கருத்து விமர்சனங்களைச் சந்தித்தது. இந்த நிலையில் பாபியா அதிகாரி தனது கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

விளக்கம் அளித்து மன்னிப்பு

இது தொடர்பாக பாபியா அதிகாரி கூறுகையில் “இது நமது முன்னோர்கள் கூறிய பழமொழி. தீபம் ஏற்றுவதும், யாகம் செய்வதும் சமூகத்தில் உள்ள தீமைகளை அகற்றும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. தற்போது அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதால், இதுபோன்ற கருத்துகள் இன்றைய காலத்திற்கு பொருத்தமானவை அல்ல.

எனவே, யாராவது மனவேதனை அடைந்திருந்தால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் கூறியவற்றை திரும்ப பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தயார். அவற்றை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவே கருதிக்கொள்ளுங்கள். சமூகத் தீமைகள் முன்னரும் ஒழிக்கப்பட்டன. இன்றும் தொடர்ந்து ஒழிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *