வங்கியில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிய வைர வியாபாரி மோடி சிக்கினார் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 100 கோடி வழங்க லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு!

1 Min Read

லண்டன், ஜூன் 25- துபாய் வைர நிறுவனம் ஒன்றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால், அவர் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு லண்டன் சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அவர் மனித உரிமைகளுக்காக அய்ரோப்பிய நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் வெளிவருவதற்கு முன்பாக கடந்த 2012இல் துபாயைச் சேர்ந்த ‘பையர்ஸ்டார் டைமண்ட்’ நிறுவனம் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற நீரவ் மோடி உத்தரவாதம் வழங்கி உள்ளார்.

ஆனால் இந்நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தாததால் சிபிஅய் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால், அவர் அந்தக் கடனை அடைக்க லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு தாக்கீது அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த லண்டன் நீதிமன்றம், பையர்ஸ்டார் குழும கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், தான் திருப்பிச் செலுத்துவதாக நீரவ் மோடி உத்தரவாதம் அளித்துள்ளதால், அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தாத ரூ.100 கோடியை பாங்க் ஆப் இந்தியாவுக்கு நீரவ் மோடி திருப்பிச் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *