மூடநம்பிக்கைப் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடாத கிராமங்கள்!

4 Min Read
- Advertisement -

சென்னை, நவ.9 மூடநம்பிக்கைப் பண்டி கையான தீபாவளியை பல ஆண்டுகளாகக் கொண்டாடாத கிராம மக்கள் உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 12 கிராமங்களில் கடந்த 72 ஆண்டுகளாக தீபாவளி கொண்டா டப்படுவதில்லையாம்.

எஸ்.மாம்பட்டி ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி மற்றும் இந்திரா நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  தீபாவளியை மற்றொரு சாதாரண நாளாகவே கடந்து செல்கின்றனர். தீபாவளி நாளில் இந்தக் கிராமங்களில் பட்டாசு சத்தம் கேட்பதில்லை. புத்தாடை அணிந்தவர்களையும் காண முடிவதில்லை. வழக்கம்போல மக்கள் விவசாயப் பணிக்காக வயல்களுக்குச் சென்றுவிடுகின்றனர்.

அந்தப் பகுதிகளில் தீபாவளிக்கான எந்த அறிகுறியும் தென்படாது. இப்பகுதி மக்கள் புரட்டாசி, அய்ப்பசி மாதங்களில் விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம். முந்தைய காலங்களில் பெரும்பாலானோர் வசதியில்லாத நிலையில் இருந்ததால், வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயப் பணிகளை மேற்கொண்டனர். தை மாதத்தில் அறுவடை முடிந்ததும். வாங்கிய கடனுக்காக நெல் தானியங்களை வழங்கி வந்தனர்.

இதனால் அய்ப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அவர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்தது. பலரும் தீபாவளி கொண்டாடவும், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில், 1954 ஆம் ஆண்டு ஊர்க்கூட்டம் கூட்டிய மக்கள், இனி தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என முடிவு செய்தனர். அந்த முடிவை 71 ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே அமைந்துள்ள கிட்டாம்பாளையம் கிராமம்,  25 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளியன்று பட்டாசு வெடிக்காத பழக்கத்தைப் பின்பற்றி வருகிறது.

ஊரின் பல பகுதிகளில் வளர்ந்து நிற்கும் பழைமையான ஆலமரங்கள், அரச மரங்கள், நாவல் மரங்கள் உள்ளிட்ட மரங்கள் பல உயிரினங்களுக்குத் தங்குமிடமாக உள்ளன. குறிப்பாக, நூற்றுக்கணக்கான வவ்வால்களும் பல்வேறு பறவைகளும் இந்த மரங்களைச் சார்ந்து வாழ்கின்றன.

கோவை கிட்டாம்பாளையம்

விழாக் காலங்களில் எழும் பட்டாசு வெடிச்சத்தம் மனிதர்களுக்கு சில நொடி பரவசத்தை கொடுக்கலாம். ஆனால், அதே சத்தம் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை ஏனோ பலரும் நினைப்பதில்லை.

இந்தத் திடீர் அதிர்வுகளால் அவை தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளி யேறுவதுடன், கூடுகளில் இருக்கும் குஞ்சு களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்தப் பாதிப்புகளை, கிட்டாம்பாளையம் கிராம மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதுமட்டுமல்ல, தங்களுடைய கொண்டா ட்டத்தால் மற்ற உயிர்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று முடிவும் செய்தனர்.

அந்த முடிவு இன்றுவரை மாறாமலும் தொடர்கிறது… ஒரு தலைமுறை எடுத்த முடிவை அடுத்த தலைமுறையும் ஏற்றுக்கொண்டு வருவது இந்தக் கிராமத்தின் தனித்துவமாக மாறியிருக்கிறது.

வெடிச்சத்தம் பறவைகளையும், வவ்வால்களையும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறையை பின்பற்றுவதாக அவர்கள் தெரிவிக்கின்ற னர். ஒரு பண்டிகைக்காக மட்டும் பட்டாசு களைத் தவிர்ப்பது எளிது. ஆனால், ஊரின் ஒட்டுமொத்த நிகழ்வுகளிலும் அதே கொள்கையைக் கடைப்பிடிப்பது என்பது அந்த மக்களின் வாழ்க்கையோடு இயற்கைப் பாதுகாப்பு எந்த அளவுக்கு இணைந்திருக்கிறது என்பதைக் காட்டு கிறது.

குழந்தைகளிடம் தொடங்கும் மாற்றம்

பட்டாசு வெடிப்பது குழந்தைகளுக்கு இயல்பாகவே ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. வண்ண வண்ண மத்தாப்புகள், சத்தமாக வெடிக்கும் பட்டாசுகள் எனத் தீபாவளியின் மகிழ்ச்சியை அவர்கள் தங்க ளுக்கான விதத்தில் எதிர்பார்ப்பார்கள். ஆனால், கிட்டாம்பாளையத்தில் வளரும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியின் இன்னொரு முகம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தங்களைச் சுற்றி வாழும் பறவைகளும், உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டி யவை என்பதைச் சிறு வயதிலேயே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அத னால் பட்டாசுகள் இல்லாத தீபாவளி அவர்களுக்குப் பழக்கமான ஒன்றாகவே இருக்கிறது.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்​டம், வேப்​பூர் அடுத்த அடரி கிராமத்​தில் பழைமை வாய்ந்த செல்​லியம்​மன் கோயில் தோப்பு உள்ளது. இந்​தத் தோப்​பில் ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட பழந்​தின்னி வவ்​வால்​கள் (Fruit Bats) தங்கியுள்​ளன. கடந்த 10 ஆண்​டுகளுக்கு முன் இதைக்​காட்​டிலும் கூடுதல் எண்​ணிக்​கை​யில் இருந்த இந்த வவ்​வால்​கள் நாளடை​வில் குறைந்து கொண்டே வந்​ததால், கிராம மக்​கள் ஒன்று கூடி இவற்றைப் பாது​காக்க முடிவெடுத்​தனர். இயற்கை ஆர்​வலர்​களின் ஆலோசனைப்​படி, அன்று முதல் பட்​டாசு வெடிப்பதை இக்​கிராமத்​தில் முற்​றி​லுமாக நிறுத்தி விட்டனர்.

நூற்​றாண்டு பழைமை வாய்ந்த மரங்​களில் சில அழிந்த நிலை​யில், புதிதாக இலுப்பை, வேம்பு, புளியன் உள்​ளிட்ட நூற்​றுக்​கும் மேற்​பட்ட மரங்​களை கடந்த பத்​தாண்​டுகளில் வளர்த்து தோப்​பாக மாற்றியுள்​ளனர்.

இர​வில் கல்​வ​ராயன் மலைப் பகுதிக்கு இரை தேடி சென்​று​விட்டு, காலை​யில் வந்து தங்​கும் வவ்​வால்களை கிராம மக்​கள் யாரும் துன்​புறுத்​து​வது இல்லை. தொடக்​கத்​தில் வவ்​வால்​களை வேட்டையாடி வந்த கும்பலைக் கூட, கிராம பொது​மக்கள் விரட்டி அடித்து விட்​டனர். இந்த பழந்​தின்னி வவ்​வால்​களை தங்​களின் வளத்​தைப் பெருக்கும் பாது​காவலர்​களாக நினைக்​கின்​றனர் அடரி கிராம மக்கள்.

திட்​டக்​குடி வட்​டம், கொரக்கை கிராமத்​தில் உள்ள சாந்​தப்ப அய்​யனார் கோயில் அருகில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த புளியன்​மரத்​தில், அரிய வகை பழந்​தின்னி வவ்​வால்​கள் வசித்து வருகின்​றன. கிராமத்​தி​லிருந்து சற்று தள்ளி அமைந்​துள்ள அப்​பகுதி​யிலும் பட்​டாசு வெடித்​தல், ஒலி எழுப்​பும் செயல்களை கடந்த சில ஆண்​டுகளாக தவிர்த்து வரு​கின்​றனர்.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்​புரம் மாவட்​டம் வானூர் அரு​கில் உள்ள கழுப்​பெரும்​பாக்​கம் கிராமத்​திலும், நூற்​றாண்டு பழைமையான பெரிய மரம் ஒன்​றில் ஆயிரக்​கணக்​கான பழந்​தின்னி வவ்​வால்​கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 25 ஆண்​டுகளுக்​கும் மேலாக இக்​கிராம மக்​கள், இந்த வவ்​வால்​களுக்​காக, பட்​டாசு வெடிப்​பதே கிடை​யாது. இதை ஒரு கிராம கட்​டுப்​பாடாகவே வைத்​திருக்​கின்​றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகே பாகலூர் கவுதாசபுரம் கிராமத்​தில்
500-க்​கும் மேற்​பட்ட மக்​கள் வசித்து வரு​கின்​றனர். இக்​கிராமத்​தின் ஏரிக்​கரையில் இருந்த பழைமையான மாமரங்​களில் ஆயிரக்கணக்​கான வவ்​வால்​கள் பல தலைமுறைகளாக வசித்து வரு​கின்​றன.  வவ்​வால்​களுக்கு இடையூறு ஏற்​படக் கூடாது என்​ப​தற்​காக தீபாவளி​யின்​போது பட்​டாசுகளை வெடிப்​ப​தில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *