பெய்ஜிங், நவ. 9- சில நாட்களுக்கு முன்பு விண்வெளியில் ரகசியப் பொருளை சீனா ஏவியதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. அது என்ன பொருள், சீனாவின் திட்டம் என்ன என்று தெரியாமல் உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
சீனா ஒரு விண்கலம் தயாரித்துள்ளது. சீன மொழியில் ‘ஷென்லாங்’, அதாவது ‘தெய்வீக டிராகன்’ என அழைக்கப்படும் இந்த ரோபோ விண்கலம் ஏற்கெனவே ஏவப்பட்டு உள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு புவிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் சில பொருட்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்கப்படும் விண்கலம்
2020இல் அதன் முதல் பயணத்திலி ருந்து, இந்த விண்கலம் பல நாடுகளால் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், இதுவரை, அதன் பேனல்களில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் மங்கலான ஒளிப்படத்தைத் தவிர வேறு எதையும் யாரும் பார்த்ததில்லை.
இப்போது தான் அமெரிக்கா முதன்முதலாக இந்த விண்கலத்தின் ஓரளவு தெளிவான ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை முகமையின் (டிஅய்ஏ) அண்மைக்கால ‘விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள்’ என்ற அறிக்கையில் இந்த தகவல் வெளி யிடப்பட்டது.
இந்த ஒளிப்படம் 2024இல் யாண்டர் என்ற அமெரிக்க உளவு நிறுவனத்தின் விண்கலத்தால் எடுக்கப் பட்டது. விண்கலத்தின் கதவுகள் திறந்திருப்பதையும், அது ஒரு துணை செயற்கைக்கோளுடன் இணைக்கப் பட்டிருப்பதையும் ஒளிப்படம் காட்டுகிறது.
இருப்பினும், சீனா தனது சோதனை விண்கலம் குறித்து ரகசியம் காக்கிறது. அந்த விண்கலத்தின் அதிகாரப்பூர்வ ஒளிப்படத்தைக் கூட வெளியிடவில்லை. ஆனால் ஷென்லாங்கை ஆராய்வதற்கும் அதன் திறன்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் கிடைத்த முதல் வாய்ப்பு இந்தப் ஒளிப்படம்தான்.
அமெரிக்க அறிக்கை, விண்வெளியில் சீனாவின் விரிவடைந்து வரும் ஆதிக்கத்தை காட்டுகிறது. அது சோதனை விண்கலம் என்றும், அது 26 அடி (8 மீ) நீளத்திலும் 32 அடி (10 மீ) அகலத்திலும் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறது.
முன்னதாக, இந்த மர்மமான விண்கலத்தின் படங்கள் அதன் பேனலில் இருந்து வந்த மங்கலான பிரதிபலிப்புகளாகவே இருந்தன. இருப்பினும் ரேடார் கண்காணிப்பு, அந்த விமானம் சுற்றுப்பாதையில் பல மர்மமான பொருட்களை வெளி யிடுவதைக் காட்டியுள்ளது. 2010 முதல் இந்த ரகசிய விண்கலம் ஏழு பயணங்களை மேற்கொண்டு, 2 ஆயிரம் நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் ரகசியப் பணிகளை நடத்தியுள்ளது.
