இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வலதுசாரிகள் வெற்றி – லேபர் கட்சி அதிர்ச்சித் தோல்வி

2 Min Read

லண்டன், மே 8- இங்கிலாந்தில் மே 7 அன்று நடை பெற்ற உள்ளாட்சி மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் கியர் ஸ்டார்மரின் லேபர் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. நிகேல் ஃபராஜின் வலதுசாரிக் கட்சியான ரிஃபார்ம் யுகே பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து தேர்தல்

இங்கிலாந்தில் 136 மாவட்ட சபைகளில் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கும், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் சட்டமன்றங் களுக்கும் நடைபெற்ற தேர்தலில் ஒரே நாளில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

மே 8 காலை 7.30 மணி வரை வெளியான முடிவுகளின்படி, லேபர் கட்சி 249 இடங்களை இழந்துள்ளது. நிகேல் ஃபராஜின் தேசியவாத கட்சியான ரிஃபார்ம் யுகே 352 இடங்களை கைப்பற்றியுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியும் 137 இடங்களை இழந்துள்ளது. கிரீன்ஸ் கட்சி 25 இடங்களும், லிபரல் டெமாக்ரட்ஸ் 35 இடங்களும் கைப் பற்றியுள்ளன. தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்டார்மர், “முடிவுகள் மிகவும் கஷ்டமானவை” என்று தெரிவித்தார். அவர் பதவி விலக வேண்டும் என கட்சிக்குள் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பதவி விலக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியாக உள்ள லேபர் கட்சி தொழிலாளர்களையும் சாமானிய மக்களையும் கைவிட்டதன் நேரடி விளைவாக இந்த வெற்றி நிகழ்ந்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

தொழிலாளர்களை கைவிட்ட லேபர் கட்சி இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக இருந்த லேபர் கட்சி, ஸ்டார்மரின் தலைமையில் போர் வெறிபிடித்த, மக்கள் நலனை காவு வாங்குகின்ற வலதுசாரித்தன்மை கொண்ட கட்சியாக மாறியது. காசா மீதான இஸ்ரேல் போருக்கு ஆதரவு, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி வந்தது. அதே நேரத்தில் மக்கள் நலத்திட்ட உதவிகளை குறைத்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி வெட்டப்பட்டது. வேலை யின்மைக்கால உதவித்தொகைகள் குறைக்கப்பட்டது.

குடிவரவு கொள்கையில் கடுமையான நிலைப்பாடு எடுத்தது, பணக்காரர்களுக்கு சாதகமான பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து அமலாக்கியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை தீவிர வலதுசாரிகள் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக லேபர் கட்சியின் வாக்குகள் யுகே ரிஃபார்ம் என்ற தீவிர வலதுசாரிகளுக்கும் அவர்களுக்கு எதிரணியாக இருந்த கிரீன்ஸ் மற்றும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிகளுக்கும் இரண்டாகச் சிதறியுள்ளதை வாக்குப்பதிவுகள் உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின் மேரி பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் டிம் பேல் வாக்குப் பதிவு பற்றி பேசிய போது சிதறிய லேபர் கட்சியின் வாக்குகளில் பெரும்பாலானவை இடதுசாரிகளின் கூட்டணிக்கே சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வட இங்கிலாந்து நகரங்களான சண்டர்லேண்ட், பார்ன்ஸ்லி போன்ற தொழிலாளர் வர்க்கம் அதிகம் வசிக்கும் நகரங்களில் யுகே ரிஃபார்ம் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நகரங்கள் கடந்த சில பத்தாண்டுகளாக லேபர் கட்சியின் பலமான பகுதிகளாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *