பசுப்பாதுகாவலர்கள் மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகளால் இரண்டு மாதங்களில் 16 இஸ்லாமியர்கள் படுகொலை

- Advertisement -

லக்னோ, நவ. 10- தெற்காசிய நீதி இயக்கத்தின் இந்தியப் பிரிவு  வெளியிட்டுள்ள ஆவணங் களின்படி, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், ஆறு(அரியானா, பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்) மாநிலங்களில் ஹிந்துத்துவ  அமைப்புகளால்  16 இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டுள்ளனர்

2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது காலாண்டு அறிக்கையில், அரியானா, பீகார், உத்தரப்பிரதேசம் மேற்குவங்க மாநிலங்களில் பசுப் பாதுகாவலர்களால் மட்டும் எட்டு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கமும் உத்தரப்பிரதேசமும் தலா மூன்று படுகொலை பதிவு செய்துள்ளன.

காவல்துறை அறிக்கையின் படி 146 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 103 என்கவுண் டர்கள்  உத்தரப்பிரதேசத்தில் மட்டும் நடந்துள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் இம்மாநிலத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதோடு, காவல் துறையினரின் நடவடிக்கைகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன

நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் பசுக்கடத்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் தப்பிச்செல்ல முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்று காவல்துறை கூறுகிறது

2017 ஆம் ஆண்டு முதல் உத்தரப்பிரதேசத்தில் ‘என்கவுண்டர்களில்’ கொல்லப் பட்டவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்று மாநில காவல்துறை தரவுகள் காட்டுகின்றன.

மாநிலத்தில் இஸ்லாமியர் களின் மக்கள் தொகை சுமார் 19 சதவீதமாகும்.

இது தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரணையில் என்கவுண்டர் செய்த அதி காரிகளுக்கு மாநில அரசின் பரிந்துரையின் பெயரில் பதவி உயர்வு மற்றும் வெகுமதி வழங்கி இருப்பது கண்டறியப்பட்ட்து

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் உத்தர காண்ட்  ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்களை புறக்கணிக் கும் வகையில் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காமலும் சுகாதார நிலை யங்களில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்க வைப்பதும் அதிகரித்து வருகிறது

இவ்வாறு இஸ்லாமியர் களுக்கு எதிராகச் செயல்படும் அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் குடிமைப் பாதுகாப்புப் படை என்ற  ஒன்றிய உள்துறை அமைச் சகத்தின் புதிய ஏற்பாடு அமைந்துவிடுமோ என்ற அச்சம் பெருமளவில் எழுந் துள்ளது. அப்படி உருவானால் சிறுபான்மையினர், தாழ்த்தப் பட்டோர், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அனை வரும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்பதற்குத் தெற்காசிய நீதி இய்க்கத்தின் அறிக்கையே எடுத்துக்காட்டாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *