“மூத்த பத்திரிகையாளருக்கே இந்த நிலைமையா?” வாக்காளர் பட்டியலில் ஆர்.ராஜகோபாலின் பெயர் நீக்க விவகாரத்தால் வெடித்த அரசியல் சர்ச்சை!

2 Min Read

கொல்கத்தா, ஜூலை 1– மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில நாளித ழான ‘தி டெலி கிராப்’பின் முன்னாள் ஆசிரியர் ஆர்.ராஜ கோபால், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதால் கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியாமல் தவித்து வரும் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அரசியல் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கடுமை யாக விமர்சித்து வரு கின்றன.

பாதிக்கப்பட்ட மூத்த பத்திரிகை யாளர் ஆர்.ராஜகோபால் இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

“மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவ டிக்கையினால் (SIR), அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 27 லட்சம் மக்களைப் போல எனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளது.

எனது 10-ஆம் வகுப்புச் சான்றி தழைச் சமர்ப்பித்த போதிலும், பெயர் நீக்கப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

இதுதொடர்பான எனது மேல்முறையீடு, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ஒன்றில் நிலுவையில் உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால், என்னால் கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியவில்லை.

கடந்த மார்ச் 19-ஆம் தேதியே பயோமெட்ரிக் நடைமுறைகளை முடித்திருந்தாலும், காவல்துறை சரிபார்ப்பு (Police Verification) இன்னும் நிலுவையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

ஒரு மூத்த பத்திரிகை யாளரான எனக்கே இந்த நிலைமை என் றால், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் இன்னும் என்னென்ன கொடுமைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்வார்களோ?” என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள்
கடும் கண்டனம்

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

காங்கிரஸ்: “நாடு எந்த அளவிற்கு அறிவுக்குப் பொருந்தாத ஒரு மோசமான நிலையை எட்டியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் மிகத் தெளிவாகப் பிரதிபலிக் கிறது” என்று காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா விமர்சித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ்: “மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலுக்கு நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதோடு, மனதை உலுக்கும் நிகழ் வாகவும் உள்ளது” என்று அக்கட்சியின் எம்பி சாகரிகா கோஷ் தெரிவித் துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: “பாஜவின் பிளவுபடுத்தும் இந்துத் துவா செயல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவும், அவர்களின் குடியுரிமைகளை நிர்ணயிக் கவும் இந்த எஸ்அய்ஆர் (SIR) நடைமுறை பயன் படுத்தப்படுகிறது” என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக எழுந் துள்ள இந்த சர்ச்சை, தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *