மணிப்பூர் இசைக் கலைஞர் டில்லியில் அடித்துக் கொலை வடகிழக்கு மாநிலத்தவருக்கு பாதுகாப்பில்லை

இணையவழி கையெழுத்து இயக்கம்

ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி செப். 09- மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் சொங்தாம் விக்ரம் சிங் என்பவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டி தலைநகர் டில்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: டில்லி ஆசிரமம் பகுதியில் உள்ள கிலோக்ரி கிராமத்தில் வசித்து வந்த 54 வயதான மணிப்பூர் இசை ஆசிரியரான சொங்தாம் விக்ரம் சிங், தனது வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட சத்தம் மற்றும் இடையூறு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, விக்ரம் சிங் தனது வீட்டிற்கு எதிரே உள்ள உணவக ஊழியர்கள் மற்றும் உணவை எடுத்துச் செல்லும் இளைஞர்கள் எழுப்பிய சத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இந்த மரணத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. சொந்த நாட்டின் தலைநகரில், தனது வீட்டின் வாசலிலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்குப் பிறகு, நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோமா? என்ற அதே கேள்வியைத்தான் டில்லியில் உள்ள ஒவ்வொரு வடகிழக்கு மாநிலக் குடும்பமும் இன்று கேட்கிறது.

வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்தச் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டில்லி காவல்துறையும் ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்ற வாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விக்ரம் சிங்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல் தெரிவித் துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *