ராஜபாளையம் அருகே புத்தூர் மலையில் வெண்சாந்து ஓவியங்கள் மற்றும் கற்கால மனிதர்களின் குகை வாழ்விடங்கள் கண்டுபிடிப்பு!

- Advertisement -

ராஜபாளையம், நவ. 10- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் மலையில், வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கற்கால மனிதர்களின் குகை வாழ்விடங்களும், அரிதான வெண்சாந்து பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

ராஜபாளையம் புத்தூர் மலைப் பகுதியில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், சமணர் படுகைகள் மற்றும் கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் வழங்கிய தகவலின் அடிப்படையில், ராஜ்கோ பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் பிரேம் மற்றும் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் புத்தூர் மலையில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இயற்கையாக அமைந்துள்ள மூன்று குகைகளை, கற்கால மனிதர்கள் தங்கும் இடங்களாக (புடவு) பயன்படுத்தி வந்துள்ளனர். இத்தகைய குகை அமைப்புகளே இப்பகுதிக்கு ‘கட்டில் பாறை’ என்ற பெயர் வரக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இக்குகைத் தளங்களில் மழைநீர் உள்ளே கசியாத இயற்கைப் பாதுகாப்பு அம்சங்களுடன், அரைப்பு தேய்ப்புக் குழிகளும் காணப்படுகின்றன.

அரிதான வெண்சாந்து ஓவியங்கள்

இயற்கையான குகைத் தளத்தின் மேற்பகுதியில் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பாகும். இந்த ஓவியங்களில் மனிதர்களின் போர்க்காட்சிகள் அக்காலச் சூழலில் வாழ்ந்த விலங்குகளின் உருவங்கள் வாள் மற்றும் கேடயம் போன்ற ஆயுதங்களின் வடிவங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன.

இவை அக்கால மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டையும் புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

தற்போது இந்தப் பகுதிக்கு வருபவர்கள் குகைப் பகுதியில் அடுப்பு மூட்டிச் சமைப்பதால், அங்குள்ள பழைமையான ஓவியங்களின் மீது கரிபடிந்து சேதமடையும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

எனவே, பாறை ஓவியங் களின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் கருத்தில் கொண்டு, அவற்றை உடனடியாகப் பாதுகாக்க தொல்லியல் துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *