ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பா.ஜ.க. ஆளும் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்

1 Min Read

காந்தி நகர், மே 29- குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகப்பகுதியில் சுமார் 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன.

ரகசியத் தகவலின் அடிப்படையில் கடலோரக் காவல்படை நடத்திய தேடுதல் வேட் டையில் ஒரு சரக்குக் கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 மூட்டை களை பறிமுதல் செய்தனர்.

அந்த மூட்டைகளில் 115 கிலோ எடையில் கொக்கைன் போதைப் பொருள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.

பறிமுதல்

போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப் பொருளை கடத்தி வந்த கப்பலையும் முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 115 கிலோ போதைப் பொருளின் மதிப்பு 1,150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆளும் குஜராத் தில் குறிப்பாக அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பாஜக ஆளும் மாநிலம் போதைப் பொருட்களுக்கு நுழை வாயிலாக மாறிவிட்டது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *