விழிஞ்ஞம் துறைமுக பங்கு விற்பனைக்கு அனுமதி பெறாதது ஏன்? அதானி குழுமத்திற்கு கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி கண்டனம்

திருவனந்தபுரம், ஜூலை 3- கேரளாவின் முக்கியத் திட்டமான விழிஞ்ஞம் துறைமுகத்தின் பங்குகளை, மாநில அரசின் முன் அனுமதியின்றி சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு விற்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. மாநில அரசுடன் ஆலோசிக்காமல் அதானி குழுமம் எடுத்த இந்த முடிவு கண்டனத்துக்குரியது என்று கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்துப் பேசியதாவது: அரசுக்கும் அதானி குழுமத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி, விழிஞ்ஞம் துறைமுகத்தின் 25 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்றாலே மாநில அரசின் முன்அனுமதி கட்டாயம் தேவை. அப்படியிருக்கையில், அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் 49 சதவிகித பங்குகளை மாற்றியமைக்க அதானி குழுமம் துணிந்தது எப்படி? இது முற்றி லும் சட்டவிரோதமானது. அதுமட் டுமின்றி அரசுடனான ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் இது.

அதானியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக துறைமுகத் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் வி.டி.சதீசன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண் டும். இதை ஒரு பெரிய வெளி நாட்டு முதலீடாகச் சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனால், இது அதானி குழுமம் லாபம் சம்பாதிப்ப தற்கான ஒரு முயற்சி மட்டுமே.

உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான எம்.எஸ்.சி இந்தத் துறைமுகத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தால், விழிஞ்ஞம் துறைமுகம் அந்த ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கத்திற்குள் சென்றுவிடும். இது வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பங்கு விற்பனை தொடர்பாக அதானி குழுமம் அரசிடம் எதையும் தெரிவிக்க வில்லை என்று முதலமைச்சர் வி.டி.சதீசன், சட்டப்பேரவையில்  1.7.2026 அன்று கூறியிருந்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *