திருமலை, மே 22 கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கக் கிரீடம் போனது. பார்ப்பனர்களால் விற்கப்பட்டதாக பக்தர் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட் டம் குடிவாடாவில் சிறீகல்யாண வெங்கடேஸ்வர கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு, மாதுரி சுப்பாராவ் (81) என்ற தீவிர பக்தர், இக்கோயில் சுவாமியை அலங்கரிப்பதற்காகத் தனது சொந்த செலவில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள, வைர கற்கள் பதிக்கப்பட்ட 461 கிராம் எடையுள்ள தங்க கிரீடத்தை உபயமாக வழங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன்பு சுப்பாராவ் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, தான் மிகுந்த பக்தியுடன் வழங்கிய அந்த வைர கிரீடம் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது குறித்து விசாரித்தபோது, கோவில் பராமரிப்பு தொடர்பான செலவீனங்களுக்காக அந்த கிரீடம் விற்கப்பட்டுவிட்டதாக அர்ச்சகர்கள் அவருக்குத் தெரிவித்தனர். இதைக் கேட்ட முதியவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் சுப்பாராவ், அதிகாரிகளிடம் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சாமிக்கு வழங்கப்பட்ட விலையுயர்ந்த நகையே விற்கப்பட்டதாக எழுந்துள்ள இந்த புகார், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆந்திர அரசின் கீழ் வரும் இந்தக் கோயிலில் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த பொருளை விற்பதற்கு அர்ச்சகர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
