பிரதமர் மோடி வெளிநாட்டு உதவியால்தான் பதவியில் நீடிக்கிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.3- பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு உதவியால் தான் பதவியில் நீடிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், பொய்களையும் வதந்திகளையும் பரப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். மேலும், வெளிநாடுகளின் சவால்களுக்கு நாம் தீர்வு காண முயன்று வரும் வேளையில், நாட்டிற்குள்ளேயே சில சக்திகள் நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகப் பிரதமர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களைக் குறிக்கும் வகையில் பேசிய மோடி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாடுகளில் யாரையெல்லாம் ரகசியமாகச் சந்திக்கிறார்கள் என்றும், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் யாருக்கு ஆதரவளிக்கின்றன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், “மோடி அவர்களே. நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். நீங்களே வெளிநாட்டு உதவியால்தான் பிரதமரானீர்கள். வெளிநாட்டு உதவியால் தான் தொடர்ந்து பிரதமராக நீடிக்கிறீர்கள்.

உங்களின் நிதி அமைப்பு வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் முழுக்க உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. இதுகுறித்து வெளிப்படையான விவாதத்திற்கு நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் இதைப்பற்றி விவாதிக்கலாம். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் வாருங்கள். இதற்கு நீங்கள் துணிய மாட்டீர்கள். ஏனெனில், உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைக் கண்டு உங்களுக்கு பயம்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *