டில்லியில் எஸ்.அய்.ஆரை எதிர்த்து நவ.1இல் நடைபெறும் பேரணியில் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 30- வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நவம்பர் 1-ஆம் தேதி டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பேரணியில் பங்கேற்க பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர் பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இது எந்த அரசியல் கட்சிக்காகவும் நடத்தப்படும் பேரணி அல்ல; இந்தி யாவின் இறையாண்மைக்காக நடத்தப்படும் பேரணி.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரால் விரக்தியடைந்த அனைவரும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற விரும்புபவர்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்க நினைப்பவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுங்கள். இது நாட் டுக்காக நடத்தப்படும் ஒரே போராட்டம்.

அரசியலமைப்பையும் இந்திய தேசத்தையும் பாதுகாக்க நாம் ஒன்றாக நடப்போம். அரசியல் சார்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர் அமைப்புகளும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா தாக்குதலுக்குள்ளாகிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் கருத்து வெளிப்பாடு, சிந்தனை, எண்ணங்கள் ஆபத்தில் உள்ளன என்று உணர்ந்தால், எங்களுடன் இணையுங்கள்.

இது நாட்டின் இறையாண்மைக்கான மிக முக்கியமான பேரணியாக இருக்கும். உங்களை அங்கு சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். எதற்கும் அஞ்சத் தேவையில்லை. காவல்துறை அல்லது தடியடி குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. பாஜகவுக்கு தனது வழக்கமான தந்திரங்களை மேற்கொள்ளும் துணிவு இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *